பேஸ் மட்டம் ரொம்ப வீக்கு.. 30 நிமிடம் மழைக்கே தாங்காத முதல்வர் திறந்து வைத்த ஸ்டேடியம்..!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காலை முதல் கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் சுமார் 30 நிமிடம் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

இதற்கிடையே திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் தமிழக முதலமைச்சரால் அண்மையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் பார்வையாளர்கள் அரங்கில் நிழற்குடை திடீரென கான்கிரீட்டை உடைத்துக் கொண்டு சரிந்து விழுந்தது.

இது குறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி சரிந்து விழுந்த மேற்கூறையை பார்வையிட்டதோடு மைதானத்தை மூடுவதற்கும் உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் மேற்கூறையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விரிவான விசாரணை நடத்தி தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

சுமார் 15 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட இந்த மைதானத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் 30 நிமிட மழைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த மைதானத்தின் மேற்கூரை கான்கிரீட்டோடு சரிந்து விழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirunalveli VOC stadium roof collapsed due to rain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->