திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா..முதல்வர் ரங்கசாமிக்கு அழைப்பு!
Thirukameeswarar Temple Chariot Festival Invitation to Chief Minister Rangasamy
முதல்வர் ரங்கசாமியிடம்திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா மற்றும் ஒதியம்பட்டு ஸ்ரீ பிடாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா அழைப்பிதழை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார்
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் புகழ்பெற்ற அருள்மிகு கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் ஆலய பிரம்மோற்சவ தேர்த் திருவிழா 22–ஆம் தேதி ஸ்ரீ பிடாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பிடாரியம்மனுக்கு 7 நாள் உற்சவம் நடத்தப்பட்டு 29–ஆம் தேதி இரத உற்சவமும், 30–ஆம் தேதி விநாயகர் உற்சவமும் நடக்கிறது. 1–ஆம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சுவாமி வீதிவுலா நடைபெறுகிறது. 3–ஆம் தேதி சுவாமி பாரிவேட்டை நிகழ்ச்சியும், 7–ஆம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பிரம்மோற்சவம் 8–ஆம் தேதி காலை 7.40 நடைபெறுகிறது. திருத்தேர் பிரம்மோற்சவத்தை முதல்வர் ரங்கசாமி அவர்கள் வடம் பிடித்து தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமையில் கோவில் நிர்வாக அதிகாரி திருக்காமேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் ரமணன், சுப்ரமணியன், ஏழுமலை, ராஜி, மிலிட்டரி முருகன், கார்த்தி ஆகியோர் முன்னிலையில் முதல்வர் ரங்காமி அவர்களிடம் திருத்தேர் பிரம்மோற்சவ பத்திரிகை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஜூன் 6–ஆம் தேதி காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒதியம்பட்டு கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பிடாரியம்மன் ஆலயத்திற்கு நடைபெறும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், திமுக மாநில துணை அமைப்பாளர் ஏ.கே.குமார், ஒதியம்பட்டு கோவில் நிர்வாக அதிகாரி பற்குணன், திருப்பணி நிர்வாகிகள் குலசேகரன், மாரிமுத்து, திருவேங்கடம், பாலு, தர்மலிங்கம் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
English Summary
Thirukameeswarar Temple Chariot Festival Invitation to Chief Minister Rangasamy