அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மீது சிபிஐ விசாரணை தேவை..காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்! - Seithipunal
Seithipunal


அமைச்சர் தேனீ ஜெயக்குமாருமீது சிபிஐ விசாரணை கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.


புதுச்சேரியில் வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு சொந்தமான இடத்தில் சமீபத்தில்  போலி மதுபான தொழிற்சாலை இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது,இது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது.இந்த விவகாரத்தில் அமைச்சர் தேனீ ஜெயக்குமாரு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் புதுச்சேரியில் வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கியது மற்றும் சந்தனக் கட்டை கடத்தல் விவகாரத்தில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மீது சிபிஐ விசாரணை கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியலிங்கம் தலைமையில்  முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன் முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான் கமலக்கண்ணன் அனந்தராமன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகள் என 500 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சட்டமன்ற நோக்கி கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் அமைச்சர் தேனீ ஜெயக்குமாரு மீது சிபிஐ விசாரணை கோரி கோஷங்களை எழுப்பினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Investigation by the CBI is needed against Minister Dhanesh Jayakumar Congress party members protest


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->