குடிநீர் குழாய் அடைப்பை சீர் செய்யவேண்டும்..MLA அனிபால் கென்னடி வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


உப்பளம் தொகுதியில் குடிநீருக்கான முயற்சிகள் தீவிரம் பெறும் வகையில் செயற்பொறியாளர் வாசு அவர்களை எம்எல்ஏ அனிபால் கென்னடி நேரில் சந்தித்து மனு அளித்தார்.

புதுச்சேரி, உப்பளம் தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் குடிநீர் குழாய் பாதை அடைப்பு மற்றும் சேதம் ஏற்பட்டு, பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு இருந்தது . இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுப்பணித்துறையிடம் பல முறை எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் அதிகாரியை சந்தித்து தெரிவித்தார்.

சில இடங்களில் மட்டுமே பழுது சரி செய்யப்பட்டுள்ளது; மேலும் சில பகுதிகளிலும் விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் அதிகாரியை கேட்டுக் கொண்டார்.

மேலும், தண்ணீர் சுத்தம் இல்லாத பகுதிகளுக்கு அரசு அறிவித்துள்ள 60 லிட்டர் R.O குடிநீர் கேன் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற கேள்வியையும், ஆட்டுப்பட்டி மற்றும் வம்பாகீரப்பளையத்தில் R.O Water Plant அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற வேண்டும் என்பதையும், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு. வாசு அவர்களை நேரில் சந்தித்து சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் கேட்டுக்கொண்டார். இதற்காக ஏற்கனவே இடம் அரசிடம் கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது,இந்த சந்திப்பில் கழக உறுப்பினர்கள் செல்லப்பன் மற்றும் ரகுராமனும் உடனிருந்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The drinking water pipe blockage needs to be rectified MLA Anibal Kennedys insistence


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->