வேலைக்கு சென்ற இடத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்.. 3 வாலிபர்கள் மொத்தமாக கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 3 வாலிபர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் சந்தை புதுத்தெரு பகுதியை சார்ந்தவர் சுரேஷ். இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூர் அருகே செயல்பட்டு வரும் பின்னலாடை நிறுவனத்தில் தங்கியிருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறான். 

இந்நிலையில், இவன் அப்பகுதியை சார்ந்த 17 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, வழக்குப்பதிவு செய்த அவிநாசி காவல் துறையினர் மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதனைப்போல, தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் காந்திநகர் காலனியை சார்ந்தவன் எம். பாண்டி (வயது 28). இவனது தம்பி ஜீவா (வயது 27). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொரவலூர் அருகே தங்கியிருந்து வெங்காயம் மற்றும் தேன் வியாபாரம் செய்து வந்துள்ளனர். 

இந்நிலையில், இவர்கள் இருவரும் பொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தேன் வியாபாரத்திற்காக சென்ற நிலையில், அப்பகுதியை சார்ந்த 10 ஆம் வகுப்பு பயின்று வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பாண்டி மற்றும் ஜீவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Youngsters Arrested by Tiruppur Police about Sexual Abuse and Sexual Torture Complaint


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal