தேனி: ஆம்னி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 2 ஓட்டுனர்கள் பரிதாப பலி.. 6 பயணிகள் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


தனியார் ஆம்னி பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இரண்டு ஓட்டுநர்களும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆம்னி பேருந்து பயணிகள் 6 பேர் காயமடைந்தனர். 

தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி உப்பார்பட்டி விலக்கு அருகே தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்து சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு கம்பம் சென்று கொண்டு இருந்தது. இன்று காலை உப்பார்பட்டி விலக்கு அருகே சென்றுகொண்டு இருந்தது. 

எதிர்திசையில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெங்காயம் ஏற்றுக்கொண்ட லாரி வந்துள்ளது. இந்த இரண்டு வாகனமும் உப்பார்பட்டி விலக்கு அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இரண்டு வாகனத்தின் முன்புறமும் நொறுங்கவே, பேருந்தின் ஓட்டுநர் ஆனந்தப்பட்டி பகுதியை சார்ந்த மாரியப்பன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லாரி ஓட்டுநரான சென்னை அரும்பாக்கத்தை சார்ந்த துரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், பேருந்தில் இருந்த 6 பயணிகள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அவசர ஊர்தி வாயிலாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

தேனி - கம்பம் சாலையில் அனுதினமும் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில், மொத்தமாக 100 க்கும் மேற்பட்டோர் கடந்த பல வருடங்களில் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Theni Veerapandi Near Village Omni Bus Truck Accident 2 Vehicle Drivers Died 6 Passengers Injured


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->