கள்ளக்காதல் விவகாரம்.. கணவனை போட்டுத்தள்ளி, கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தேனியில் திகீர்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள கடமலைக்குண்டு மேல்பட்டியில் உள்ள பள்ளித்தெரு பகுதியை சார்ந்தவர் முத்துக்காளை (வயது 42). இவருக்கும், தேனி அருகேயுள்ள தர்மாபுரி பகுதியை சார்ந்த கலையரசி என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்கள் இருவருக்கும் ஹரிஷ்குமார் என்ற 13 வயது மகனும், கிஷோர் குமார் என்ற 12 வயது மகனும் உள்ளனர். 

கணவன் - மனைவி இருவருமே கட்டிட தொழிலாளியாக இருந்து வரும் நிலையில், கலையரசிக்கும் - மேல்பட்டியை சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுபதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் முத்துகாளைக்கு தெரியவரவே, இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி முத்துக்காளை தனது சகோதரர் ஈஸ்வரனுக்கு தொடர்பு கொண்டு ஊருக்கு வருவதாக தெரிவித்த நிலையில், அவர் குறித்த எந்த விதமான தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் கடந்த 5 ஆம் தேதி ஈஸ்வரன் கலையரசியை அழைத்துக்கொண்டு, அங்குள்ள வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மேலம்பட்டி காமாட்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் முத்துக்காளையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொள்கையில், கலையரசி மற்றும் சேதுபதி விவகாரம் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கள்ளக்காதல் ஜோடி முத்துகாளையை கொலை செய்தது வெளிச்சமாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Muthukalai Murder to his wife Kalaiyarasi Illegal affair with Sethupathi 10 November 2020


கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துAdvertisement

கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து
Seithipunal