பிஞ்சுலயே முளைத்த காதல்., சொந்தமாக இருந்தும் எதிர்ப்பு.! காட்டுக்குள் நடந்த பயங்கரம்.! - Seithipunal
Seithipunal


தங்களைப் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் காதல் ஜோடி இருவர் காட்டுக்குள் சென்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரின் மகன் நிதிஷ்குமார். இவரும் இவரின் உறவினரான சுரேஷ் என்பவரின் மகள் ரிவேதாவும் பள்ளிப்பருவம் முதல் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரிந்துள்ளது. சொந்தம் என்ற போதிலும் இவரின் காதல் இவர்களின் காதலுக்கு முதலில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர், கல்லூரி கல்லூரி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக காதல் ஜோடியிடம் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ரிவேதாவின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் வரன் பார்த்ததாக தெரிய வருகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடிகள் எங்கு நம்மை பிரித்து விடுவார்களோ? என்று அஞ்சி, கடந்த 8ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் தேனி மாவட்டம், கோர்ட்டுக்கு வந்த அந்த காதல் ஜோடி, அங்கு உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றனர்.

பின்னர் தாங்கள் எடுத்து வந்த விஷத்தை அருந்தி அங்கேயே இருவரும் மயங்கி விழுந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காதல் ஜோடியை பார்த்து, உடனடியாக இரண்டு பேரையும் மீட்டு தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ரித்தீஷ்குமார் உயிரிழந்தார். நேற்று காலை ரிவேதாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theni lovers commit suicide


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal