பெற்றோர்களிடம் சொத்தை நயவஞ்சகமாக ஏமாற்றி வாங்கி, தெருவில் விட்ட கொடூர மகன்.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள போடி தர்மத்துப்பட்டி பகுதியை சார்ந்தவர் பம்பையன் (வயது 70). இவரது மனைவி ராமுத்தாய் (வயது 65). இந்த தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள் உள்ள நிலையில், வயதான தருணத்திலும் தம்பதிகள் வேலைபார்த்து பிழைத்து வந்துள்ளனர். 

இந்த தருணத்தில், இவர்களின் மகன் புவனேஸ்வரன் என்பவர், இருவரையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி, ஆசை வார்த்தை பேசி பணத்தை பெற்றுள்ளார். பின்னர் இருவரையும் கண்டுகொள்ளாது இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், புவனேஸ்வரன் கடந்த சில தினத்திற்கு முன்னதாக பெற்றோர்களின் தலைவலிக்கு மாத்திரை கொடுப்பதாக கூறி, தூக்க மாத்திரையை பெற்றோருக்கு வழங்கியுள்ளார். இருவரும் மயக்கத்தில் இருக்கையில் தாயின் கழுத்தில் இருந்த நகை மற்றும் வீட்டில் மீதமிருந்த நகையை திருடிவிட்டு, இனிமேல் உங்களுக்கு வீட்டில் இடம் இல்லை என்று கூறி வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளார்.

செய்வதறியாது திகைத்த இருவரும் மாவட்ட ஆட்சியினர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்கவே, கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் விபரத்தை கூறி புகார் மனு வழங்கியுள்ளனர். இந்த புகாரை ஏற்ற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Aged Couple Complaint against his son Cheating


கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்துAdvertisement

கருத்துக் கணிப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து
Seithipunal