தேனி : ஒரே பள்ளியை சேர்ந்த 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகாரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 33 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பள்ளி மூடப்பட்டு அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Theni 33 students from the same school are confirmed to be infected with corona virus


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->