கொழுந்தியாவுக்கு ஆசைப்பட்ட வாலிபர் .. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
The young man who longed for a girl the shocking event that happened in the end
திருவண்ணாமலை அருகே கொழுந்தியாவுக்கு ஆசைப்பட்ட ஆட்டோ டிரைவர் ரத்தக்காயங்களுடன் பிணம் கிடந்த சம்பவத்தில் மைத்துனரே கொன்றது தெரியவந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் அருகே ஆரணி ஆரணிப்பாளையம் டி.ஆர்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கணபதி.30 வயதான இவர் பையூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த மோனிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தில் நேற்று முன்தினம் ரத்த காயங்களோடு ஆட்டோ டிரைவர் கணபதி பிணமாக கிடந்தார்.இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
அதனை இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த கொலை சம்மந்தமாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், மோனிஷாவின் சகோதரர் மகேஸ்வரன்கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் வெளியாகின. கணவன் கணபதி -மனைவி மோனிஷாக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மோனிஷா வேறொருவருடன் சென்றுவிட்டார். இதனால் குழந்தைகள் மோனிஷாவின் சகோதரர் மகேஸ்வரன் வீட்டில் இருந்தனர். இதனால் கணபதி அடிக்கடி குழந்தைகளை பார்க்க வரும் போது, மற்றொரு சகோதரியுடன் பழகியுள்ளார். மேலும் அவருக்கு திருமண ஏற்பாடு செய்வதை அறிந்து, கொழுந்தியாளை தனக்கே திருமணம் செய்து கொடுக்கும்படி தகராறு செய்துள்ளார். இதனால் மதுபோதையில் இருந்த அவரை மகேஸ்வரன் கத்தியால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் மகேஸ்வரனை கைது செய்தனர்.கொழுந்தியாவுக்கு ஆசைப்பட்ட ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The young man who longed for a girl the shocking event that happened in the end