புதிய சாலை அமைக்கும் பணி..எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் ! - Seithipunal
Seithipunal


வில்லியனூர் ஆகாஷ், அரவிந்த் வின் சிட்டி நகர்களுக்கு ரூ. 45 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !


    வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரவிந்த் வின் சிட்டி நகருக்கு ரூபாய் 27 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் தார்ச்சாலை மற்றும் ஆகாஷ் நகருக்கு ரூபாய் 17 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் தார்ச்சாலை என மொத்தம் ரூபாய் 45 லட்சம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    இதில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா மற்றும் அரவிந்த் வின் சிட்டி, ஆகாஷ் நகர் ஊர் முக்கியஸ்தர்கள் மோகன், கருணாநிதி, ஆரோக்கியதாஸ், கோவிந்தசாமி, தண்டபாணி, சுரேஷ் ராஜா, முருகானந்தன், சின்னப்பன், தணிகாசலம், கோவிந்தசாமி, முகுந்தன், தினேஷ், ஜான், மார்ட்டின், சேகர், சத்யராஜ், சரவணன், ஆனந்த், ஏகாம்பரம், அருள், ரகுராம் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி , செல்வநாதன், தர்மராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொமுச தலைவர் அங்காளன், ,ஆதிதிராவிடர் அணி தலைவர் பழனிசாமி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், விவசாய அணி துணை அமைப்பாளர் ராமதாஸ், ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன்,தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், கிளைக் கழக நிர்வாகிகள் ராஜி, கோடிபிரகாசம், தட்சிணாமூர்த்தி, வெங்கடேசன், மந்திரிகுமார், அன்பு, அன்புநிதி, வெங்கடாசலபதி, ரவி, செல்வம், சேகர், ரகு, கோதாண்டம், பிரவின், வேலு, வீரமுத்து, அபிமன்னன், காளிதாஸ், திவிஷ், அருணகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The work of constructing a new road has been inaugurated by the opposition party leader R Siva


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->