புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.. நேரு MLA பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட இளங்கோ நகரில் புதிய சிமெண்ட் சாலை மற்றும் இருபுற கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணியை நேரு(எ)குப்புசாமி MLA துவக்கிவைத்தார்.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட இளங்கோ நகர் வார்டு பகுதி இளங்கோ நகர் இரண்டாவது பிரதான சாலை (பத்மினி மினி ஹால் ) பக்கத்தில் உள்ள சிமெண்ட் சாலை பழைய சிமெண்ட் சாலையை மாற்றி புதிய சிமெண்ட் சாலை மற்றும் இருபுற கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணி 2024-2025  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 32 லட்சத்து 44  ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் இந்த திட்டத்தை  புதுச்சேரி நகராட்சி மூலம் பணிகள் துவங்குவதற்கான பூமிபூஜை விழா 10.07.2025... இன்று காலை 10:30 மணி அளவில் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவர்மான  திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் திருக்காரங்களால் இளங்கோ நகர் 2வது பிரதான சாலை (பாலாஜி திரையரங்கம் எதிர்புறம் ) அருகில் பூமிபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் புதுச்சேரி நகராட்சி செயற்பொறியாளர் திரு.சிவபாலன் ,உதவி பொறியாளர்திரு.நமச்சிவாயம், இளநிலைபொறியாளர்திரு.குப்புசாமி,ஒப்பந்ததாரர் ,,திரு.ராதாகிருஷ்ணன், மற்றும் புதுச்சேரி நகராட்சி அதிகாரிகளும் நகராட்சி ஊழியர்களும் மேலும் உருளையன்பேட்டை  தொகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும், நிர்வாகிகளும், மகளிர்களும், இளைஞர்களும் பலர் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The work of constructing a new cement road Nehru MLA performed the ground-breaking ceremony


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->