"அதிகாரிகள் பாலியல் தொல்லை அளிக்கிறார்கள்" ., தீக்குளிக்க முயன்ற பெண்..!! தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு...!! - Seithipunal
Seithipunal


அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுப்பதால் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துகுடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட பெரிய நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (37). இவர் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக கணினி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அவர் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த காவல்ரகள் அவரை தடுத்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.

இதனை அடுத்து அவரிடம் மேற்கொள்ளபட்ட விசாரணையில், வட்டாச்சியரின் கார் ஒட்டுநர் கனகராஜ் என்பவர் அவரை பணியில் இருந்து நீக்குவதற்காக பல இடையூறுகள் கொடுத்ததாகவும் உயர் அதிகாரிகளும் கூடுதல் பணிச்சுமை தந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும்,அரசின் நலதிட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவரது வங்கி கணக்கிற்கு மாற்றி அவரை மிரட்டி அவரது ஏ.டி.எம் கார்ட் மூலம் பணத்தை எடுத்து செலவு செய்து விட்டு தற்போது அவர் மீது பழியை போடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் சுல்தானும், அவரின் ஓட்டுநர் கனகராஜூம் அவருக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும்  இதற்கு மறுக்கும் பட்சத்தில் அவர் மீது பொய் குற்றசாட்டு சுமத்தி வேலையை விட்டு நீக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் தீக்குளிக்க முயன்றதாகவும் மாவட்ட ஆட்சியர் தான் இதற்கு தீர்வு காணவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The woman who tried to set fire to the Thoothukudi Collector's Office


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal