உன் சாவு என் கையில தான்., காதல் கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி..!! தடுக்க வந்த மாமியாருக்கும் கத்தி குத்து..!! - Seithipunal
Seithipunal


செல்போன் பேசாதே என கண்டித்த கணவனை மனைவி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கீழ்முகம் கிராமத்தில் வசித்து வருபவர் பாலமுருகன்.இவர் இலக்கியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த ஜோடிக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்  இலக்கியா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி பாலமுருகன் மீது காவல்நிலையத்தில் வழக்கு தொடுத்திருந்தார.

இந்நிலையில், கடந்த வாரம் கணவன் வீட்டிற்கு வந்த இலக்கியா இனி பிரச்சனைகளை மறந்து சேர்ந்து வாழலாம் என கூறியுள்ளார். இதனால் இருவரும் மறுபடியும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், சம்பவதன்று இலக்கியா நள்ளிரவில் யாருடனோ செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கண்ட பாலமுருகன் யாரிடம் பேசுகிறாய் என கேட்டதற்கு அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இலக்கியா கத்தியால் கணவனை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனால் பாலமுருகன் கூச்சல் இடவே அவரது தாயார் அங்கு வந்து  இலக்கியாவை தடுத்துள்ளார். ஆனால் இலக்கியா அவரது மாமியாரையும் காயபடுத்தியுள்ளார். அது மட்டுமின்றி உன் சாவு என் கையில தான் என கூறி பாலமுருகனை தாக்கியுள்ளார்.

இதனை கண்ட அக்கம்பக்கதினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The wife who tried to stab her husband to death


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal