கிராமசபை கூட்டம் கருத்து பரிமாற்ற களமாக அமைந்திட வேண்டும்..  அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு! - Seithipunal
Seithipunal


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை முகாம்அலுவலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக உரையாற்றி கடலூர் மாவட்டம் கிராமசபை கூட்டத்தினைதொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை முகாம்அலுவலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக உரையாற்றி அனைத்து
ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டத்தினை இன்று (11.10.2025) தொடங்கி வைத்ததைதொடர்ந்து, கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டவழுதலாம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு மாவட்டஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார், இ.ஆ.ப., முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டுசிறப்பித்தார்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்
திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்ததாவது
கிராம சபை கூட்டம் என்பது ஊராட்சியில் செயல்படுத்தபடும் திட்டங்கள் குறித்து
பொதுமக்களுக்கு தெரிவித்து அவற்றில் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து தீர்மானம்நிறைவேற்றப்படுவது.

தமிழகத்தின் சமூக நீதிக்கான உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, சமத்துவம், சமூக நீதி மற்றும்சுயமரியாதை அடிப்படையிலான ஒரு சமூகத்தை உருவாக்கவும், சமூக நீதி மற்றும்சமதர்மத்தை நிலைநாட்டவும் கிராம ஊராட்சிகள். குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள்,குடிநீர் ஆதாரங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்கபொதுமக்களுடன் உரிய ஆலோசனைகள் மற்றும் பதிவுகள் குறித்தும், கிராம மக்களின் 3அத்தியாவசிய தேவைகளை தேர்வு செய்தல் குறித்தும் கிராம சபை கூட்டத்தில் விவாதம்மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம
ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள்ஏற்படுத்த வேண்டும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்குறித்து விவாதித்தல், சபாசார் செயலி செயல்பாடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித்திட்டத்தின் வரவு, செலவு மற்றும் பணி முன்னேற்ற அறிக்கை, வடகிழக்குபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து சாலைப் பணிகள் மற்றும்வடிகால் பணிகளை முடித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிமுன்னேற்ற அறிக்கை, தூய்மை பாரத இயக்க திட்டம், தொழிலாளர் துறைஅனைத்து

வகையான தொழில்களில் குழந்தைகளும் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம்பருவத்தினரும் இல்லை என்பதற்கான அறிக்கை, தாயுமானவர் திட்ட கணக்கெடுப்புமற்றும் மக்கள் நிலை ஆய்வு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடர்பானதீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், ஊரக சுய வேலைவாய்ப்புபயிற்சி நிறுவனங்களின் வாயிலாக வழங்கப்படும் சுய வேலைவாய்ப்பு பயிற்சிகளுக்குதகுதியான இளைஞர்களை விண்ணப்பிக்க அறிவுறுத்தல், இதர பொருட்கள் குறித்தும்கிராம சபை கூட்டத்தில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

‘எல்லாருக்கும் எல்லாம்” கிடைத்திட வேண்டும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்களின் உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கிராமசபைகூட்டம் நடத்தப்படுகிறது. மக்களாட்சியின் மகத்தான அமைப்பான கிராமசபைஆக்கப்பூர்வமான கருத்து பரிமாற்ற களமாக அமைந்திட வேண்டும் என தெரிவித்தார்.இது தொடர்பாக முகாம்களில் கிராமபுற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடநடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இதுபோன்ற கிராமசபைகளில் தெரிவிக்கப்படும்தீர்மானங்களை பொதுமக்கள் நீங்கள் அனைவரும் நன்கு தெரிந்துகொண்டுதீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு உங்களுடைய கருத்துக்களை தெரிவித்து அனைத்துவகையிலும் கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என மாண்புமிகு
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள்தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர் மாலதி இ.ஆ.ப., உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)
ஷபானா அஞ்சும், குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.ராமச்சந்திரன்,
வெங்கடேசன் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The village assembly meeting should serve as a platform for exchanging ideas Minister Panneerselvams speech


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->