உல்லாசத்துக்கு அழைத்த திருநங்கை.. கடைசியில் வாலிபருக்கு நடந்த அதிர்ச்சி!
The transgender person who invited for pleasure in the end a shocking incident happened to the young man
செல்போன் செயலியில் அழகான பெண்களின் புகைப்படத்தை அனுப்பி வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்த திருநங்கை அவரை மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் சென்னை கொரட்டூர் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் அழகான பெண்களுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு செல்போன் செயலி மூலம் அழகான பெண்களை தேடிவந்துள்ளார்.
அப்போது அதில் அஸ்விதா என்ற பெயரில் பெண் ஒருவர் தனது அழகான புகைப்படத்தை அனுப்பி உல்லாசத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் . அதனை பார்த்த உதயகுமார்,ஆசை ஆசையா வளசரவாக்கம், முரளி கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள வீட்டுக்கு உல்லாசமாக இருக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு சென்று பார்த்தபோது அந்த வீட்டில் திருநங்கை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து திருநங்கை அஸ்விதா மற்றும் அவருடன் இருந்த வாலிபர் என இருவரும் சேர்ந்து உதயகுமாரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர்.
இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டி அவரை விரட்டியடித்துள்ளனர் . உடனடியாக இதுபற்றி உதயகுமார் அளித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருநங்கையான முஸ்தபா என்ற அஸ்விதா மற்றும் அவரது நண்பர் தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அப்போது அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் இருவரும் அவரது நண்பர் உதவியுடன் செல்போன் செயலி மூலம் அழகான பெண்களின் புகைப்படத்தை அனுப்பி வாலிபர்களை உல்லாசத்துக்கு அழைத்து நகை, பணம், செல்போன், மோட்டார்சைக்கிள் உள்ளிட்டவைகளை பறித்து வந்துள்ளது தெரியவந்தது .
கைதான 2 பேரிடம் இருந்தும் ரூ.95 ஆயிரம், 11 செல்போன்கள், ஒரு கத்தி, 4 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களது நண்பரை தேடி வருகின்றனர்.
English Summary
The transgender person who invited for pleasure in the end a shocking incident happened to the young man