மக்கள் நலத் திட்டங்களுக்கு OG நாங்க தான்! இன்னும் நல்லா கதறுங்க– திமுக அமைச்சர்களுக்கு அதிமுக கடும் பதிலடி! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் களத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக–திமுக இடையிலான வாக்குவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கும் நகர பேருந்துகளில் இலவச பயணம், பெண்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, “திமுக திட்டங்களை அப்படியே காப்பியடிக்கிறது அதிமுக” என அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் விமர்சித்தனர்.

இதற்கு பதிலடியாக, அதிமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் கடும் வார்த்தைகளில் பதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நான்கரை ஆண்டுகளாக அஇஅதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டுமே வேலையாக வைத்திருக்கும் திமுக அமைச்சர்கள், இப்போது ‘காப்பி அடிக்கிறாங்க’ என்று சிறுபிள்ளைத் தனமாக அழுவது சிரிப்பை வரவழைக்கிறது” என்று விமர்சித்துள்ளது.

அந்தப் பதிவில், “எது ஒரிஜினல், எது காப்பி?” என்று கேள்வி எழுப்பிய அதிமுக,

அம்மா மருந்தகம் – ஒரிஜினல்; முதல்வர் மருந்தகம் – காப்பி,

அம்மா மினி கிளினிக் – ஒரிஜினல்; மக்களைத் தேடி மருத்துவம் – காப்பி,

தாலிக்கு தங்கம் – ஒரிஜினல்; அதனை மாற்றி கொண்டுவந்த புதுமைப் பெண் – காப்பி,
என்று தொடர்ச்சியாக பட்டியலிட்டுள்ளது.

மேலும், “மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே OG (Original Gangster) சொந்தக்காரங்க நாங்க தான். ஒரு குடும்பம் கொள்ளையடிக்க மட்டுமே திட்டம் போட்டு திருடும் திமுக கூட்டத்திற்கு இதெல்லாம் எப்படி தெரியும்?” என்று கடுமையாக சாடியுள்ளது.

பெண்கள் நலத் திட்டங்களை குறிப்பிட்ட அதிமுக, “மகளிருக்கு நேரடியாக பணமாக நன்மை சேர வேண்டும் என்பதற்காகத்தான் தாலிக்கு தங்கம் திட்டத்தின் அடுத்த பரிணாமமாக பொங்கல் பரிசு திட்டத்தை அஇஅதிமுக அரசு கொண்டுவந்தது. அதன் அடுத்த கட்டமாகவே 2021 தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என அறிவித்தோம்” என்று நினைவூட்டியுள்ளது.

திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்தும் விமர்சனம் முன்வைத்துள்ள அதிமுக, “எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்திய பிறகே, 28 மாதங்கள் தாமதமாக ஸ்டாலின் அரசு மாதம் ரூ.1000 வழங்க தொடங்கியது. அதுவும் சொன்னபடி அனைத்து பெண்களுக்கும் கிடைக்கிறதா? தகுதி என்கிற பெயரில் பெண்களை இழிவுபடுத்தியதை அவர்கள் மறந்துவிடுவார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

திமுக அமைச்சர்களை தனிப்பட்ட முறையிலும் தாக்கியுள்ள அதிமுக, அமைச்சர் ரகுபதியை “ஒட்டுண்ணி” என்றும், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை சட்டமன்றத்தில் கூறிய கருத்துகளை நினைவுபடுத்தியும் விமர்சித்துள்ளது. “எடப்பாடி பழனிசாமி ஒரு வாக்குறுதி அளித்தால் அது செயலில் நடக்கும் என்பதை மக்களுக்கு நன்றாக தெரியும். அதனால்தான் திமுகவுக்கு இவ்வளவு வயிற்றெச்சல்” என்றும் பதிவில் கூறப்பட்டுள்ளது.

பதிவின் இறுதியில், “நல்லா கதறுங்க அமைச்சர்களே… இன்னும் இரண்டு மாதம்தான்” என்று அரசியல் சவால் விடுத்துள்ளது. இந்த பதிலடி பதிவு, தமிழக அரசியல் வட்டாரங்களில் மீண்டும் அனல் பறக்கும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We are the OG for people welfare schemes Shout even louder AIADMK stern response to DMK ministers


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->