போகவேண்டியது மூணாறு..இறக்கிவிட்டது நடுவளியில் ..பயணிகளை அலறவிட்ட நடத்துனர்,ஓட்டுநர்!
The train that was supposed to go has left in between the conductor and the driver made the passengers panic
சென்னை,கிளாம்பாக்கத்தில்லிருந்து மூணாறு சென்ற தமிழ்நாடு அரசு பேருந்து பயணிகளை பாதி வெளியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்துபேருந்தில்பயணம்செய்தபயணிகள்தெரிவிக்கையில்:சென்னை,கிளாம்பாக்கத்தில்லிருந்து 8-7-2025அன்று மாலை 5 .15 க்கு மூணார்வரை செல்லும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து TN 01 AN 4419 அதிகாலை 4:15 மணிக்கு போடிநாயக்கனுரை வந்தடைந்தது. வந்தடைத்தவுடன் இன்று பந்த் காரணமாக பேருந்து மூணார் செல்லாது அனைவரும்கீழே இறங்கி விடுங்கள் என்று நடத்துனரும் ஓட்டுணரும் பயணிகளை இறக்கிவிட்டு மாற்று ஏற்பாடுசெய்யாமல் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார்கள். என்ன செய்வது என்று பயணிகள் தவித்து கொண்டிருக்கையில் உடனடியாக அங்கு இருந்த தனியார் ஜுப் ஓட்டுநரைஅனைவரும் மூணார் போவதற்குகேட்டோம் இப்போது மணி 4. 15 தான் ஆகுது இந்த ஓட்டுனரும் நடத்துனரும் மனசு வச்சாங்கன்னா ஆறு மணிக்குள்ள உங்கள மூணாறு கொண்டு சேர்த்துடலாம்என்று தெரிவித்தார் ஆனால் அரசு போக்குவரத்து ஓட்டுநரும் நடத்துணரும் மெத்தனமாக தான் இருப்பாங்க. இதே தனியார் பேருந்தா இருந்தா உங்களை கண்டிப்பாக மூணாறில் கொண்டு சேர்த்து இருப்பாங்க.
சரி வாங்க நான் உங்களை கொண்டு மூணாறில் டிரா ப் செய்கிறேன் ஆனா ரெகுலரா ஒரு ஆளுக்கு நாங்க வாங்குறது 200 ரூபாய் ஆனா இன்னைக்கு பந்த் என்பதால் நீங்க ஒரு ஆளுக்கு 400 ரூபாய் கொடுத்தீங்கன்னா நான் உங்கள மூணாறுகொண்டுபோய் விடுகிறேன் என்று கேட்டார் வேறு வழி இல்லாமல் சென்னையில் இருந்து வந்த 11 பேரும் அந்த ஜுப்பில் ஏறி மூணாறில் இறங்கினோம் என்ன செய்வது அரசு பேருந்து ஓட்டுனரும் நடத்துணரும் பயணிகளை இரவு நேரத்தில்இப்படி இறக்கி விடும்பொழுது. பயணிகள் மீது அக்கறை இல்லாமல் அரசாங்க ஊழியர்கள் செயல்படுகிறார் என்றால் இதற்கு அரசாங்கம் தான் காரணம் ஏன் என்று சொன்னால் நேற்று மாலையே சென்னையில் இருந்து பேருந்து கிளம்பும்போது இந்த பேருந்து போடிநாயக்கனூர் வரைதான் போகும் மூணார் போகாது என்று சொல்லி இருந்தால் பயணத்தை தவிர்த்து இருப்போம்.ஆனால் அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனரும் இதை பயணிகளிடம் சொல்லாமல் சதி செய்து விட்டார்கள். இது இந்த அரசினுடைய அதிகாரிகள் மெத்தன போக்கை தான் காட்டுகிறது என அவர்கள் தெரிவித்தனர்.
English Summary
The train that was supposed to go has left in between the conductor and the driver made the passengers panic