பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் தொமுச பேரவை..எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி பெர்ஜர் பெயிண்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தொமுச பேரவை துவக்க நிகழ்ச்சியில்  எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு பெயர் பலகை திறந்து வைத்தார்.
 
புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பண்டசோழநல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் பெர்ஜர் பெயிண்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவன வளாகத்தில் தொழிலாளர் முன்னேற்றப் பேரவையின் புதிய கிளை துவக்க விழா இன்று நடந்தது. விழாவில் புதுச்சேரி மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான இரா.சிவா அவர்கள் கலந்துகொண்டு தொமுச கொடியை ஏற்றி வைத்து, பெர்ஜர் பெயிண்யிட்ஸ் இந்தியா லிமிடெட் லேபர் யூனியன் பெயர்ப் பலகையை திறந்து வைத்து, தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள், பெர்ஜர் பெயிண்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, தொமுச நிர்வாகிகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு மாநில தொமுச அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் தலைமை தாங்கினார். தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்திகேயன், தொமுச கௌரவதலைவர் சக்திவேல், தொகுதி செயலாளர்கள் நெட்டபாக்கம் சத்திவேல், கதிர்காமம் வடிவேல் முன்னிலை வகித்தார்கள். தொமுச தலைவர் அங்காலன், துணை அமைப்பாளர்கள் மிஷேல், கண்ணன், சீனிவாசன், இரவி, துணை தலைவர் இராமகிருஷ்ணன், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் தேவேந்திரன், தொமுச எல்&டி செயலாளர் கொளஞ்சிநான், தொமுச எம்.ஆர்.எப் செயலாளர் ஐயனார் ஆகியர் வரவேற்றார்கள்.

கழக துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், தொகுதி செயலாளர்கள் நெல்லித்தோப்பு, நடராஜன், இலாஸ்பேட்டை தியாகராஜன், தட்டாஞ்சாவடி ஆறுமுகம், வில்லியனூர் மணிகண்டன், அவைத் தலைவர் ஜலால், மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், சிறுபான்மைப் பிரிவு அமைப்பாளர் முகமது ஹொலீது, இளைஞர் அணி துணை அமைப்பாளர் கிருபா, ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் திருநாவுக்கரசு, கலை இலக்கிய துணை அமைப்பாளர் இராஜேஷ், நெல்லித்தோப்பு தொகுதி இளைஞர் அணி இராமு, பூமியான்பேட் தங்கத்தமிழ்செல்வம், அமுதசுரபி தலைவர் ஐயனார், செயலாளர் விஜயகுமார், நெட்டப்பாக்கம் தொகுதி நிர்வாகிகள் பூபதி, மோகன்குமார், கல்யாணி, செல்வம், வேலுயுதம், இளங்கோ, கிருஷ்ணமூர்தி, இராமமூர்த்தி, புதுவைச் சந்திரன், புதுவை வேல், விஜயகுமார், பனையடிக்குப்பம் மோகன்குமார், குமார், குப்புசாமி, அருள், கரயான்புத்தூர் அண்ணா, புண்ணியக்கோடி, பெர்ஜர் பெயிண்ட்ஸ் தொமுச பொதுச்செயலாளர் தமிழரசன், தலைவர் புருசோத்தமன், பொருளாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் வீரப்பன், துணைச் செயலாளர் இரங்கநாதன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Thomus Association at Berger Paints was inaugurated by the opposition leader Siva


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->