அடுத்த பட இயக்குநரை மாற்றிய கமல்ஹாசன்!தக் லைஃப் தோல்வியில் இருந்து மீள கமல் எடுத்த அதிரடி முடிவு!
Kamal Haasan changes director for next film Kamal drastic decision to recover from the failure of Thak Life
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் ‘தக் லைஃப்’. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய இந்த படம், ‘நாயகன்’ வெற்றிக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து கமல்-மணிரத்னம் கூட்டணியில் வந்ததாலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இளைய தலமுறை ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் படம் விமர்சனங்களை சந்தித்தது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடும் விமர்சனங்களையும் கலாய்ப்புகளையும் பதிவு செய்தனர். படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே பல திரையரங்குகளில் இருந்து அகற்றப்பட்டு, தற்போது வெளியாகியுள்ள ‘குபேரா’ படத்தால் ‘தக் லைஃப்’ முற்றிலுமாக வாஷ்அவுட் ஆகிவிட்டது.
இந்த நிலையில், ‘தக் லைஃப்’ படத்தின் தோல்விக்கு பிறகு கமல்ஹாசன் தனது அடுத்த படத்திற்கான இயக்குநரை மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்கும் ஆக்ஷன் படத்தை அவர் 237வது திரைப்படமாக அறிவித்திருந்தார். இதற்கான ஆரம்ப பணிகள் அமெரிக்காவில் தொடங்கியதுடன், அவரது ‘ராஜ்கமல் பிலிம்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
தற்போது, புதிய தகவலின்படி எஸ்.யு. அருண்குமார் இந்தப் புதிய படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ உள்ளிட்ட பல விமர்சனரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். இந்த புதிய படத்தையும் ‘ராஜ்கமல் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் இந்தப் படத்தில் இந்த ஆண்டுக்குள் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளதுடன், அதன் பிறகு தான் அன்பறிவு இயக்கும் படத்திற்குச் செல்லவுள்ளார். அந்த படம் 2026ம் ஆண்டு மட்டுமே படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘தக் லைஃப்’ திரைப்பட தோல்விக்கு பின், கமல் தனது எதிர்கால படத் திட்டங்களில் மாற்றங்களை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kamal Haasan changes director for next film Kamal drastic decision to recover from the failure of Thak Life