14-ந்தேதி கூடுகிறது தமிழக சட்டசபை - சபாநாயகர் அறிவிப்பு!
The Tamil Nadu Assembly meets on the 14th Speakers announcement
6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியபோது கவர்னர் ஆர்.என். ரவி, தனது உரையை வாசிக்காமல் சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றது.
அதன்பிறகு, மார்ச் 14-ந்தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . அதனை தொடர்ந்து, மார்ச் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை இரு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் காரசாரமாக நடைபெற்றது.
அதன்பின்னர், மார்ச் 24-ந்தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரை துறை வாரியாகமொத்தம் 55 துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், அடுத்த மாதம் 14-ந்தேதிதமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.
இது தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் மு.அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:- சட்டப்பேரவை விதி 24 (1)-ன் கீழ் சட்டசபை கூட்டம் அக்டோபர் 14-ந்தேதி காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. அன்றைய தினம் முன்னாள் எம்.எல்.ஏ. 8 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது. மேலும், 2025-2026-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்திற்கான நிதி அனுமதியளிக்கப்படும். எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என்பது குறித்து அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
The Tamil Nadu Assembly meets on the 14th Speakers announcement