லாரி மோதி மனைவி கண்முன்னே கணவன் துடிதுடித்து உயிரிழந்த சோகம்!
The sorrow of a wife witnessing her husband dying in front of her in a truck accident
திருவள்ளூர் உழவர் சந்தை அருகே குவாரியில் இருந்து மண் ஏற்றிச் செல்வதற்காக வந்து கொண்டிருந்த லாரி வேகமாக வந்து மோதியதில் முதியவர் ஒருவர் மனைவி கண்முன்னே கணவன் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த சீயஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்.(67). இவர் திருவள்ளூர் ஜெயாநகரில் உள்ள தனது மகன் வீட்டில் மனைவி ஜெகதீஸ்வரி(63)யுடன் தங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை காய்கறி வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் ஜெ.என். சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ள ஏ.ஜே.பவுல் என்பவருக்கு சொந்தமான லாரி பூந்தமல்லியிலிருந்து விடையூர் பகுதியில் உள்ள மண் குவாரிக்கு சென்று மண் ஏற்றிச் செல்வதற்காக வந்து கொண்டிருந்தது.
அப்போது திருவள்ளூர் உழவர் சந்தை அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த முதியவர் லோகநாதன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த முதயவர் லோகநாதனை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதில் மனைவிக்கு இலேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் டவுன் போலீசார் காயமடைந்த ஜெகதீஸ்வரியை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான முதியவர் லோகநாதன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டதால் வாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மனைவி கண்முன்னை கணவன் விபத்தில் துடிதுடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட காவல் துறை சார்பில் காலை மாலை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரங்களில் கனரக வாகனங்களை இயக்க தடை விதித்தும், அதை கண்டு கொள்ளாத மண் லாரிகள் திருவள்ளூர் நகர் வழியாக சென்று கொண்டிருப்பதை காவல்துறையினர் கண்டுகொள்ளாததால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விபத்து காரணமாக சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

English Summary