தொழிலதிபர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம்.. ஆந்திராவை சேர்ந்த போலீஸ்காரர் கைது!  - Seithipunal
Seithipunal


திருப்பத்தூரில் தொழிலதிபர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஆந்திராவை சேர்ந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நிலீக்கொல்லை பகுதியை சேர்ந்தவர்  தொழிலதிபர் இம்தியாஸ்.இவரது மனைவி  சபிதா.இந்தநிலையில் தொழிலதிபரான இம்தியாஸ் வீட்டிற்குள் கடந்த 16ம் தேதி உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 4 பேர் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றனர்.

அப்போது வீட்டில் இருந்த இம்தியாஸ், பணியாளர் சக்திவேல் ஆகியோரை கட்டிவைத்த கொள்ளயர்கள்  பின்னர், இம்தியாசின் மனைவி சபிதாவை மிரட்டி வீட்டில் இருந்த பீரோவை திறந்துள்ளனர்.இதையடுத்து பீரோவில் நகை, பணத்தை திருடிக்கொண்டிருந்தபோது இம்தியாசின் மனைவி வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து கூச்சலிட்டுள்ளார். 

அப்போது அவரின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து ஓடி வந்தனர்.உடனடியாக இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள், வீட்டில் கொள்ளையடிப்பதை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இம்தியாசின் விலை உயர்ந்த செல்போன்களை திருடிவிட்டு அங்கிருந்து அந்த மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். 
ஆந்திராவின் திருமலா பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் அருண்குமார் இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அவரை கைது செய்த போலீசார் அருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The robbery incident that took place at the entrepreneurs house A police officer from Andhra has been arrested


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->