சாலை விரிவாக்கத்தால் வீடுகளை இழந்த பொது மக்கள்..மாற்று இடம் வழங்க கோரிக்கை!
The public who lost their homes due to road expansion are demanding alternative housing
கிருஷ்ணகிரி மாவட்டம்,ஓசூரை அடுத்தகெலமங்கலம் அருகே சாலை விரிவாக்கத்தால் வீடுகள் இடிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.
கெலமங்கலம்- ராக்கோட்டை இடையே சாலை வரிவாக்கம் பணி கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக நடைப்பெற்று வருகிறது. இதனால் சாலையோரம் இருந்த 100 க்கும் மேற்பட்ட புளியமரங்கள் அகற்றப்பட்டது. அதே போல் சாலையையொட்டி இருந்த 200 க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இதில் கெலமங்கலத்தில் இருந்து- ராயக்கோட்டை செல்லும் சாலையில் அனுசோனை என்கிற பகுதியில் இருந்த 141 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டது. இவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரி்க்கை விடுத்த நிலையில், அதே பகுதியில் பாறைகள் மற்றும் சிறு குன்றுகள் உள்ள பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள பாறைகளை அகற்றுவதற்கே பல லட்சம் செலவாகும் என்பதால்,மாற்று இடம் வழங்க வேண்டும் என இடிக்கப்பட்டு பாதியில் உள்ள ஆபத்தான வீடுகளிலேயே பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாற்று இடம் வழங்கி, வீடு கட்ட பணம் வழங்கிட வேண்டும் என்று பாஜக மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் தலைமையில் ,மேற்கு மண்டல் தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார். IAS, தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாற்று இடம் கேட்டு மனு அளிக்க சென்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது,சாலை விரிவாக்கத்தால் பல ஆண்டுகளாக குடியிருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு பதிலாக தங்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடத்தில பாறைகள் உள்ளது, இந்த பாறைகளை அகற்றி எடுக்கவே பல லட்சம் செலவாகும் என்பதால் ,பாதிக்கப்பட்ட அனைவருமே கூலி வேலை செய்து வருகிறோம். இதனால் தங்களுக்கு வழங்கிய இடத்தை சமம் செய்ய முடியாது. அப்படியே சென்றாலும் மின்சாரம், குடிநீர் என அடிப்படை வசதிகளும் இல்லாமல் தங்களால் செல்ல முடியாது. எனவே வேறு இடத்தை ஒதுக்கி மத்திய மற்றும் மாநில அரசின், வீடுக்கட்டி கொடுக்கும் திட்டத்தில் வீடுகள் கட்டிகொடுக்க வேண்டும் அதுவரை பாதி இடிந்த நிலையில் உள்ள வீட்டிலியே குடியிருப்போம் எனக்கூறினர்.
மேலும் அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தால் அதே வீட்டில் சாகும் வரை குடியிருப்போம் எங்கள் மீது சாலையை போட்டுக் கொள்ளட்டும் என தங்கள் ஆதங்கத்தை ஊர் பொதுமக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
English Summary
The public who lost their homes due to road expansion are demanding alternative housing