பரபரப்பு! சினிமா பாணியில் போலீஸ்க்கு அவ்வா குடுத்து ஆட்டோவில் குதித்து தப்பி ஓடிய கைதி! - Seithipunal
Seithipunal


நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக கைதியை ஆட்டோவில் அழைத்துச் சென்றபோது கைதி ஆட்டோவில் இருந்து குதித்து தம்பி ஓடிய சம்பவம் அரங்கேரி உள்ளது.

பாளையங்கோட்டை திருமலை பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சுரேஷ் அடிக்கடி குடித்துவிட்டு அப்பகுதியில் அடிதடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மது போதையில் அப்பகுதி உள்ள பெண்ணிடம் பிரச்சனைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மன உளைச்சலுக்கு ஆளான பெண் பாளை தாலுகா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் மனு அளித்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை சுரேஷை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர், அதே பகுதியில் பதுங்கி இருந்த அவரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். இரவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்து சுரேஷ் ஒரு ஆட்டோவில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

ஆட்டோ நெல்லை-மதுரை நான்கு வழி சாலையில் கக்கன் நகர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சுரேஷ் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தப்பி ஓடிய சுரேஷை துரத்திக் கொண்டு ஓடி காவலர்கள் பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இருப்பினும் சுரேஷ் இருள் சூழ்ந்த பகுதி வழியாக தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில் போலீசார்ரிடம் இருந்து தப்பி ஓடிய சுரேஷை தனிப்படை அமைத்து தீவிரமாக காவல் துறை தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The prisoner who jumped from the auto and ran away


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->