ஜாதியை சொல்லி இழிவுபடுத்திய தலைமை ஆசிரியர்....கைது செய்ய தேடும் காவல்துறை!
The principal who insulted by mentioning the caste is being sought by the police for arrest
ஜாதியை சொல்லி மாணவியை இழிவுபடுத்தியதால் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மீது SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மதுரை ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தலைமையாசிரியர் மீதுSC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
பெரியகுளம் காந்திநகர் பகுதியைச்சேர்ந்த குணமுத்து .தனது மகளைஅப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்துள்ளார்.பள்ளிக் கட்டணம் , சீருடை, மற்றும் புத்தகங்களுக்கும் பணம் கட்டியுள்ளார்.இந்நிலையில் அம்மாணவிக்கு ABCD எழுதக்தெரியவில்லையென்று பள்ளி ஆசிரியையால் வகுப்பறையிலிருந்துவெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
பள்ளியிலிருந்து தனதுகுழந்தை வெளியேற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்.இவை சம்மந்தமாக பள்ளிநிர்வாகத்திடம் கேட்ட பொழுது, உனதுமகள் மனநலம்பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறாள். அதனால் வேறு பள்ளியில்சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி ஜாதியை சொல்லி இழிவுபடுத்திய தாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து பெரியகுளம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பெரியகுளம் போலீஸார் தனியார் பள்ளிதலைமையாசிரியர் ராஜ்குமார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்
கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The principal who insulted by mentioning the caste is being sought by the police for arrest