ரெஸ்டோபார்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்திட வேண்டும்..இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்!
The permission granted to restaurants should be revoked immediately Indian Communist Party resolution
ரெஸ்டோபார்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை அரசு உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு மாநாடு வட முகத்து செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாநாட்டு கொடியினை மாநில குழு உறுப்பினர் அபிஷேகம் ஏற்றி வைக்க மாநில செயலாளர் சலீம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார், மாநில துணை செயலாளர் சேது செல்வம் நிறைவுரையாற்றினார்.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:முத்தியால்பேட்டை, உப்பளம், உருளையன்பேட்டை, ராஜ்பவன், முதலியார் பேட்டை ஆகிய தொகுதிகளில் சுத்தமான குடிநீர் வருவதில்லை, தண்ணீர் வேகமும் குறைந்து வருவதால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள், எனவே சுத்தமான குடிநீர் வருவதற்கும் தடையில்லாமல் தண்ணீர் கிடைப்பதற்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி நகரப் பகுதியில் அளவுக்கதிகமாக ரெஸ்ட்டோபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இந்த ரெஸ்டோபார்கள் டேன்ஸ் போன்ற கச்சேரிகள் நேரம் கடந்தும் விடிய விடிய நடைபெற்று வருவதால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள், இந்த ரெஸ்டோபார்களுக்கு வருபவர்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வருகிறார்கள், இந்த ரெஸ்டோர்களில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது, கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளார்கள்
எனவே ரெஸ்டோபார்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை அரசு உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.நகரப் பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு உப்பனாற்றின் மீது மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இப்பணி ஆமை வேகத்தில் ஆண்டு கணக்கில் நடைபெற்று வருகிறது, உடனடியாக இந்த பணியை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மேம்பாலம் பாதசாரிகள் பயன்படுத்துவதற்காக கட்டப்பட்டது இந்த மேம்பாலத்தை மக்கள் பயன் படுத்துவதற்கு சிரமப்படுகிறார்கள் எனவே இந்த மேம்பாலத்தினை குளிரூட்டப்பட்ட இழுவை படிக்கட்டாக (ESCULATER )மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.என இம்மாநாடு வலியுறுத்துகிறது
உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கத்தை முழுமையாக மக்கள் பயன்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.குபேர் திருமண மண்டபத்தை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
உப்பளம் தொகுதி முழுவதும் வீடற்ற மக்களை கணக்கெடுத்து இலவச வீட்டு மனை பட்டா (அ ) அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வழங்கிட வேண்டும். உப்பளம் தொகுதி முழுவதும் பல தலைமுறைகளாக ஒரே இடத்தில் வசிக்கின்ற மக்களுக்கு அதே இடத்தில் மனைப்பட்ட வழங்கி அரசின் வீடு கட்டும் திட்டத்தில் கடன் உதவி வழங்கிட வேண்டும்.
உப்பளம் தொகுதி தமிழ் தாய் நகரில் உள்ள பொறையாத்தம்மன் குளத்தினை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சவர் கட்டி மக்கள் பயன்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். உப்பளம் தொகுதிக்குட்பட்ட ராசு உடையார் தோட்டம், பிரான்சுவா தோட்டம் பகுதியில் பல வருடங்களாக தூர் வாராமல் இருக்கும் கழிவு நீர் வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்திட வேண்டும்.
முத்தியால்பேட்டை தொகுதி முழுவதும் குடிநீர் குடிப்பதற்கு சுகாதாரமற்ற நிலையில் இருந்து வருகிறது, சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.முத்தியால்பேட்டை தொகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்,எனவே தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.முத்தியால்பேட்டை மணி குண்டு பூங்காவிற்கு தியாகி முருகசாமி கிளைமான்சோ பெயர் சூட்டப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டது, தற்போது இந்த பெயர் பலகை பூங்காவில் இல்லாமல் இருந்து வருகிறது எனவே தியாகி முருகசாமி கிளைமான்சோ பெயர் பலகையை உடனடியாக வைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி பெரிய மார்க்கெட், குபேர் அங்காடியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுமார்க்கெட் முழுவதும் உள்ள நடைபாதைகள் மக்கள் வழுக்கி விழும் நிலையில் இருந்து வருகிறது. இதனை உடனடியாக புதுப்பித்துக் கொடு மார்க்கெட் முழுவதும் மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து உள்ளது. இதனை உடனடியாக சரி செய்து கொடு
மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்படுகிறார்கள், குடிப்பதற்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடு பெரிய மார்க்கெட்டில் கடை வைத்துள்ளவர்களுக்கு வாடகை, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தும் நிலை இருந்து வந்தது. இதனை மாற்றாமல் பழைய முறையே பின்பற்ற வேண்டும்
மார்க்கெட்டில் கடை வைத்துள்ளவர்களுக்கு அவர்களின் பெயரில் உரிமம் வழங்க நடவடிக்கை எடுபெரிய மார்க்கெட்டில் உள்ள அடிக்காசு வாடகையை, மாத வாடகையாக மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுபெரிய மார்க்கெட்டில் உள்ள கட்டண கழிப்பிடம், பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் இருந்து வருகிறது, இந்த கழிப்பிடத்தை நவீன கழிப்பிடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
பெரிய மார்க்கெட்டில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது, இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு கேமராக்கள்(CCTV) பொருத்த நடவடிக்கை எடுத்திடுபாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு அறை ஏற்படுத்தி தர வேண்டும்பெரிய மார்க்கெட் நுழைவு வாயில்கள் இரவு 11 மணிக்கு மேல் மூட வேண்டும்.
English Summary
The permission granted to restaurants should be revoked immediately Indian Communist Party resolution