தலித் சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்..ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்!
The ministerial position should be given to the Dalit MLA... Omshakti Sekar's insistence!
சிறுபான்மை இனத்தை சேர்ந்த கிறிஸ்துவ சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு அமைச்சர் பதவியும், தலித் சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு அமைச்சர் பதவியும் வழங்க வேண்டும் என அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:புதுவை மாநிலத்தில் 2021 சட்டமன்ற பொது தேர்தலில் எதிர் கட்சிகளின் பல்வேறு பொய் பிரச்சாரங்கள் செய்து தேர்தலை சந்தித்த எதிர்க்கட்சிகள் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இதற்குஇடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரே தொகுதியில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுபான்மை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி பெற செய்தார்கள். அப்படி வெற்றி பெற்ற உறுப்பினர்களை கொண்டு NR ஆட்சி அமைய பெற்றது.அந்த தருவாயில் நெல்லிதோப்பு தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற இரண்டு சிறுபான்மைவினதை சேர்ந்த இரண்டு கிறிஸ்துவ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகுதி வாய்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அன்று வலியுறுத்தினேன்.
அந்த தருவாயில் அவர்களுக்கு உரிய பங்களிப்பை தராமல் தலித் மக்களுக்கு பிஜேபி சார்பாக ஒருவரை அமைச்சராகவும் NR கட்சி சார்பாக தலித் இனத்தை சேர்ந்த பெண்மணிக்கு ஒரு அமைச்சர் அளித்த இந்த அரசை மனதார பாராட்டினோம்.
இருப்பினும் பாஜக வை தமிழகம் புதுவையில் ஒரு மதவாத கட்சி என்று எதிர் கட்சிகளின் பொய் பிரச்சாரதை முறியடிகின்ற வகையில் தமிழகத்தில் 4 சட்டமன்ற உறுப்பினர்களும் புதுவையில் 6 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று இங்கு ஒரு மக்கள் நலன் காக்க கூடிய அரசியல் இயக்கமாக பிஜேபி திகழ்ந்து கொண்டு இருக்கிறது.
இதுபோன்ற சூழலில் தலித் இனத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்களை ராஜினாமா செய்து வைத்திருப்பது மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படிபட்ட சூழலில் எதிர்வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் சிறுபான்மை இனத்தை சேர்ந்த கிறிஸ்துவ சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு அமைச்சர் பதவியும், தலித் சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு அமைச்சர் பதவியும் வழங்கி மக்களுடைய நம்பிக்கை பெற வேண்டும்.இதுஎதிர் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றிக்கு வழிவகை செய்யும் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் ரங்கசாமியை கேட்டு கொள்கிறேன்என அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
The ministerial position should be given to the Dalit MLA... Omshakti Sekar's insistence!