இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
The laborer fell from the twowheeler in dharmapuri
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி வெங்கடேசன். இவர் இருசக்கர வாகனத்தில் தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசனை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்து குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
The laborer fell from the twowheeler in dharmapuri