செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலந்த விவகாரம்..தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் சரமாரி கேள்வி! - Seithipunal
Seithipunal


செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தவறியது ஏன்? என்று கேள்வி எழுப்பி இதற்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசு, இருங்காட்டுக் கோட்டை சிப்காட் நிர்வாகம் பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்து .

செம்பரம்பாக்கம் ஏரி நீர் சென்னையில் உள்ள மாவட்டங்களுக்கும் குடிநீர் ஆதாரமாக  உள்ளது. இந்த ஏரியில் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கலக்கப்படுவதாக சமீபகாலமாக புகார் எழுந்தது . மேலும் மருத்துவமனை கழிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உள்ளிட்ட கழிவுகளும் இந்த ஏரியில் கலக்கிறது என்று செய்தி வெளியானது.

அந்த செய்தியில், ஏரியின் நீர்வரத்து கால்வாய்களான கிருஷ்ணா கால்வாய், பங்காரு கல்வாய்யில் அதிக அளவில் கழிவு நீர் ஏரியில் கலப்பதனை கண்காணித்து தடுக்காமல் தமிழக நீர்வளத்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாகவும் கூறியிருந்தது.

இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து  தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்,வழக்கு விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபால் அமர்வு, செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தவறியது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். மேலும் இதற்கு பதில் அளிக்கும்படி தமிழ்நாடு அரசு, இருங்காட்டுக் கோட்டை சிப்காட் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.அதனை தொடர்ந்து  விசாரணையை ஜூலை 15-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The issue of sewage mixed in the Semparambakkam Lake the Tamil Nadu government faces a serious question from the Green Tribunal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->