அம்பேத்கர் கனவை திராவிட மாடல் அரசு தான் செயல் படுத்துகிறது: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர்..! - Seithipunal
Seithipunal


அம்பேத்கர் 1921-22-ஆம் ஆண்டு லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படிக்கும்போது இங்கிலாந்து நாட்டின் கேம்டன் நகரில் வாழ்ந்தார். அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அவர்கள் அம்பேத்கர் வாழ்ந்த இல்லத்தை சென்று பார்வையிட்டார். 

அங்கு அவர் பேசும் போது கூறியதாவது:- அம்பேத்கருக்கு சமமாக இந்தியாவில் யாரையும் சொல்லமுடியாது என்று தந்தை பெரியார் சொன்னதாக கூறியுள்ளார். அத்துடன், இந்தியாவிலேயே முதன்முதலாக அம்பேத்கர் பெயரில் அரசு கல்லூரியை கொண்டு வந்தது திமுக தலைமையிலான அரசு தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சென்னை சட்ட பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்டியவர் கலைஞர். மராத்வாடா பல்கலைக் கழகத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்டவேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து தந்தி அனுப்ப வேண்டும் என்று கலைஞர் உத்தரவிட்ததால்  பல்லாயிரக்கணக்கான தந்திகள் போனதால் தான் அங்கும் அம்பேத்கர் பெயரைச் சூட்டினர் என்று தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில். அம்பேத்கரின் ‘சாதியை ஒழிக்கும் வழி’ என்ற நூலை 1936-ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்து புத்தகம் போட்ட இயக்கம் திராவிட இயக்கம் என்றும்,  அம்பேத்கரை விதைத்தது திராவிட இயக்கம்தான் என்பதை மறந்துவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து எங்களுக்குத் தலைமை வகிக்க வேண்டும்” என்று சிலர் அம்பேத்காரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்,  “உங்களுக்குத் தான் பெரியார் ராமசாமி இருக்கிறாரே? அவரை வைத்து இயக்கம் நடத்துங்கள்” என்று சொன்னவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன், 1969-ஆம் ஆண்டு முதன்முதலில் முதலமைச்சரான கலைஞர்தான் ஆதிதிராவிடர் நலத்துறையையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையையும் தனித்தனியே உருவாக்கினார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பட்டியலின மக்களுக்கு 18 விழுக்காடும், பழங்குடியினருக்கு 1 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடும் வழங்கியவர் கலைஞர் என்றும்,  அம்பேத்கர் கனவை செயலாக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நமது அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துத் தந்த அம்பேத்கரை பின்பற்றி, சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணாமல், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க என்றும் உறுதி ஏற்போம் என்று அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Avadi SM Nassar says that the Dravidian model government is implementing Ambedkar dream


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->