பகலில் வெயிலின் தாக்கம் 2 டிகிரி வரை அதிகரிக்கும்..வானிலை மையம் எச்சரிக்கை!
The impact of the sun during the day will increase to 2 degrees Weather center warns
வரும் நாட்களிலும் பகலில் வெயில், மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பச்சலனத்தால் மழை என்ற சூழ்நிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை கனமழை பெய்தது.இதையடுத்து கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி, நெல்லை ,தென்காசி ,நீலகிரி ,தேனி திண்டுக்கல் ,கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது . சென்னையில் கடந்த சிலநாட்களாக மாலை நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.ஒருபுறம் மழை பெய்துவந்தாலும் மறுபுறம் வெப்பம் வாட்டி வதைத்தது.
தென் மேற்கு பருவமழை தொடங்கினாலும், தற்போது பருவமழை குஜராத் உள்ளிட்ட சில பகுதிகளில் தீவிரம் அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருந்தாலும், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிலும் இன்று இயல்பைவிட 2 டிகிரி வரை வெப்பம் உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக வரும் நாட்களிலும் பகலில் வெயில், மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பச்சலனத்தால் மழை என்ற சூழ்நிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
The impact of the sun during the day will increase to 2 degrees Weather center warns