'கோவில்களில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்கு தான்; சிறப்பு மரியாதைகளை, ஒருபோதும் உரிமையாக கோர முடியாது'; உயர்நீதிமன்றம் அதிரடி..!
The High Court has ruled that in temples the first respect is always due to the deity
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவராஜ சுவாமி கோவிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு, 1992 முதல் வழங்கப்பட்டு வந்த, 'பஞ்ச முத்திரை மரியாதை' நிறுத்தப்பட்டதை எதிர்த்து, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹிந்து அறநிலையத் துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜரானார்.
அவர், தேவராஜ சுவாமி கோவில் செயல் அறங்காவலரின், 1991-ஆம் ஆண்டு செப்டம்பர் 05-ஆம் தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டபடி, காஞ்சி காமகோடி பீடம் -சங்கர மடம், அகோபில மடம், நாங்குநேரி வானமாமலை மடம், மைசூர் பரகால ஜீயர் மடம், உடுப்பி வியாசராயர் மடம் ஆகிய ஐந்து மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே சிறப்பு மரியாதைகள், பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
கோவிலில் முதல் மரியாதை என்பது எப்போதும் தெய்வத்துக்கு தான் என்றும், சிறப்பு மரியாதைகளை, ஒருபோதும் உரிமையாக கோர முடியாது என்று உத்தரவிட்டுள்ளனர். அத்துடன், மடங்களின் தலைவர்களை கௌரவிப்பது, அவர்களுக்கு மரியாதை வழங்குவது குறித்து, அறநிலையத்துறை சட்டப்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலேயும், இதுதொடர்பாக, அறநிலையத் துறை அதிகாரியை அணுகி, மனுதாரர் தரப்பு நிவாரணம் கோரலா என்று உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
The High Court has ruled that in temples the first respect is always due to the deity