அதிகார போட்டியால் குப்பை அகற்றும் பணி பாதிப்பு..திமுக பரபரப்பு குற்றச்சாட்டு!   - Seithipunal
Seithipunal


லஞ்சம், அதிகார போட்டியால் நடைபெறாத குப்பை அகற்றும் பணியால் புதுவை முழுக்க துர்நாற்றம் வீசுவதாக எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சிவா கூறியதாவது:புதுச்சேரியில் ஸ்வச்தா கார்ப்பரேஷன் மூலம் குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்நிறுவனம் பல இடங்களில் குப்பை தொட்டிகளை வைத்து, அதில் பொதுமக்கள் கொட்டிய குப்பைகளை எடுத்துச் சென்று குப்பைகிடங்கில் குவித்து வந்தது. அவ்வாறு குவிக்கப்படும் குப்பைகள் தரம் பிரித்து, உரமாக, பழைய பொருட்களாக மாற்றப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு ஏதும் செய்யப்படவில்லை.

இதனால் குப்பை சேகரிக்கப்பட்டு வந்த குருமாம்பேட் உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் பசுமை தீர்ப்பாயம் புதுச்சேரி அரசுக்க அபராதமும் விதித்தது. ஸ்வச்தா கார்ப்பரேஷன் குப்பைகளை தரம் பிரிக்காவிட்டாலும் குப்பைகளை தெருக்களில் இருந்து அகற்றும் பணியை ஓரளவு செய்தே வந்தது. இந்நிலையில் அதன் ஒப்பந்த காலம் முடிவடைந்தது. இதனையடுத்து புதியதாக டெண்டர் விடப்பட்டது. அதில் பல அனுபவ நிறுவனங்களும், பெரிய நிறுவனங்களும் பங்கேற்று இருந்தாலும் போதிய முன் அனுபவம் இல்லாத கிரீன் வாரியார் நிறுவனத்தை உள்ளாட்சித்துறை தேர்வு செய்தது. இதில் பல கோடி லஞ்சம் கைமாறியதாக குற்றச்சாட்டு உள்ளது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது புதுச்சேரியில் பெரும்பாலன இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. லஞ்சம் கைமாறல் மற்றும் ஆட்சியாளர்களின் அதிகார போட்டி ஆகியவைகளில் குப்பை பிரச்சனை கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.

புதிய நிறுவனம் தொட்டிகளை வைக்காமல் வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரிக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் வீடு தோறும் சென்று குப்பை சேகரிக்கப்படவில்லை. சில இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது, பல இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் மக்கள் ஏற்கனவே குப்பை தொட்டிகள் எங்கு இருந்தனவோ அந்த இடத்தில் கொண்டு சென்று குப்பைகளை கொட்டி வருகின்றனர். அந்த குப்பைகளை தெருநாய்களும், மாடுகளும் தங்கள் உணவிற்காக கிண்டிவிடுவதால் புதுச்சேரி முழுக்க துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

குப்பை அகற்றும் பணிக்கான டெண்டரில் என்னென்ன நிறுவனங்கள் கலந்து கொண்டன? அதில் எதற்காக கிரீன் வாரியார் நிறுவனத்தை தேர்வு செய்தது? அந்த நிறுவனம் என்னென்ன பணிகளை செய்ய வேண்டும்? அதாவது வீடுகள் தோறும் சென்று குப்பை சேகரிக்க வேண்டுமா? அதற்கு எவ்வளவு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருக்க வேண்டும்? தினமும் எந்த நேரத்தில் அவர்கள் வீடுகளுக்கு வந்து குப்பைகளை அகற்றுவர்? தற்போது சில இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளதே அது எதனால்? மீண்டும் அனைத்து இடத்திலும் குப்பை தொட்டிகள் வைக்கப்படுமா? அல்லது தற்போது வைத்துள்ள இடங்களில் இருந்தும் குப்பை தொட்டிகள் எடுக்கப்பட்டு விடுமா? ஸ்வச்தா கார்ப்பரேஷனுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டது? 

அவர்கள் என்னென்ன பணிகளை செய்தனர்? கிரீன் வாரியார் நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது? அவர்கள் ஸ்வச்தா கார்ப்பரேஷனை விட கூடுதலாக என்னென்ன பணிகளை செய்வார்கள்? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளாட்சித்துறை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
உள்ளாட்சித்துறை புதிய முறையில் குப்பைகள் அகற்ற இருப்பது பற்றி மக்களை எந்தவகையிலும் தயார் செய்யவில்லை. மேலும் போதிய முன் அனுபவமும் இல்லாத நிறுவனத்திற்கு குப்பை அகற்றும் டெண்டரை கொடுத்து மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது. இதனை திமுக வன்மையாக கண்டிக்கிறது. மேலும் உடனடியாக புதுச்சேரி முழுக்க உரிய முறையில் குப்பை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அதிகார போட்டி நடத்தும் இந்த அரசையும், உள்ளாட்சித்துறையையும் கண்டித்து மக்களே போராட்டங்களை நடத்தும் அவல நிலையும் ஏற்படும், அதற்க திமுக துணையாக இருக்கும் என்று எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறேன் என சிவா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The garbage removal work is affected due to the power struggle DMK raises sensational allegations


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->