15 நாட்களில் வாய்க்கால்களை தூர் வாரவேண்டும்..முன்னாள் MLA எச்சரிக்கை!
The drainage systems should be cleared within 15 days Former MLAs warning
சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி ஓம்சக்தி சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
நெல்லிதோப்பு சட்டமன்ற தொகுதியில் பாதுகாப்பான குடிநீர் அனைத்து பகுதிகளிலும் வழங்க கோரியும், தேவையான இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட உடனடி நிலையங்கள் கூடுதலாக அமைத்திடவும், பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை மாற்றி புதிதாக அமைத்திடவும், மழைக்காலம் நெருங்குவதால் அனைத்து பிரதான வாய்க்கால்களை குறிப்பாக சாரம் பாலம் முதல் வேல்முருகன் நகர் வரை உள்ள வாய்க்காலை நன்றாக ஆழப்படுத்தி தூர்வார வலியுறுத்தியும் புதுச்சேரி மாநில அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் பொதுப்பணி துறையை வலியுறுத்தி மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சாரம் பாலம் அருகே நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநிலக் கழக நிர்வாகிகள் தொகுதி கழக செயலாளர்கள், அணி செயலாளர், பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள், மகளிர் அணியினர் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் புது பணி துறையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன, கோரிக்கை அட்டைகளையும் பிடித்தவாறும்,மாசடைந்த குடிநீர் பாட்டில்களை கையில் வைத்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் நிலவும் பல்வேறு பொதுப்பணித்துறை சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பொதுப்பணி துறை அமைச்சருக்கும் பொதுப்பணித்துறைக்கும் மனுக்களை அளித்து வந்துள்ளோம். ஆனால் பொதுப்பணித்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக இதுவரை தெரியவில்லை. நெல்லித்தோப்பு தொகுதி மக்கள் அல்லல் படும்போது நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். சக்தி நகர் பகுதியில் குடிநீர் குழாய்களை உடனடியாக மாற்றி lஅமைத்து புதிதாக குடிநீர் குழாய்களை உடனடியாக அமைக்க வேண்டும். அரசின் சார்பில் வழங்கப்படும் குடிநீர் கேன்களை சக்தி நகர் பகுதி மக்களின் அவரவர் இல்லங்களுக்கே சென்று வழங்க வேண்டும். கடந்த ஆண்டு மழையின் போது சக்தி நகர் பகுதி மழை வெள்ளத்தால் மிகுந்த பாதிப்பு சந்தித்தது. இந்தாண்டு அதுபோன்ற ஒரு நிலை இல்லாமல் அனைத்து வாய்க்கால்களையும் உடனடியாக ஆழப்படுத்தி தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக நெல்லித்தோப்பு தொகுதி முழுவதும் பாதிப்பை சந்திக்காமல் இருக்க சாரம் பாலம் முதல் வேல்முருகன் நகர் வரை உள்ள வாய்க்கால் உடனடியாக தூர்வாரப்பட வேண்டும். அதே போல பொதுப்பணித்துறை சம்பந்தமான நாங்கள் அளிக்கும் கோரிக்கைகள் இன்னும் 15 நாட்களில் சரி செய்யப்படாவிட்டால் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி பொதுப்பணிதுறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என ஓம்சக்தி சேகர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
The drainage systems should be cleared within 15 days Former MLAs warning