மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு: மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதுவரை இயல்பை விட 59 சதவீதம் மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்யும் என்பதால், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, பள்ளிகளில் மின் இணைப்புகளை கண்காணிப்பது, வடிகால்களை சுத்தம் செய்வது, திறந்தவெளி கால்வாய்களை துார்வாரி மூடுதல், குழிகளை நிரப்புதல் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள், மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். அகற்றுதல், கூரைகளில் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து உடனடியாக அகற்றல், சேதமடைந்த கட்டடங்களை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவர்கள் சைக்கிள்களில் பள்ளிக்கு வரும் போது பாதுகாப்பாக வர அறிவுறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் மழையால் பள்ளியில் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச் சுவர் உறுதித் தன்மையை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மின் கசிவு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, உறுதிப்படுத்த வேண்டும் என்றும், பருவமழை காலங்களில் மாணவர்கள் மழைக் கோட்டுகள், குடைகளை பயன்படுத்தவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Department of School Education has ordered the maintenance of schools as a precautionary measure during the rainy season


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->