பழிவாங்கும் உணர்ச்சியை தூண்டி ரவுடியை போட்டுத்தள்ளிய கல்லூரி மாணவன்!
The college student who stirred feelings of nostalgia and kicked out the ruffian
சென்னை ரவுடி கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.தந்தையை தீர்த்துக்கட்டியதால் 17 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்குப்பழி வாங்கியதாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புளூகான் ராஜ்குமார் என்பவர் மனைவி மற்றும் குடும்பத்துடன் டி.பி.சத்திரம் ஜோதியம்மாள் நகரில் வசித்து வந்தார். ராஜ்குமார் ‘பி' பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார். சமீப காலமாக இவர் ரவுடி தொழிலை விட்டு விலகி சாவு நிகழ்ச்சிகளுக்கு சாமியானா பந்தல் அமைக்கும் தொழிலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கும்பல் அவரை மடக்கி அரிவாளால் வெட்டினார்கள்.கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து டி.பி.சத்திரம் போலீசார் விசாரித்தபோது பழிக்குப்பழி வாங்குவதற்காக இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த யுவனேஷ் என்ற கல்லூரி மாணவர் தனது நண்பர்கள் 2 பேருடன் இந்த கொலைவழக்கு தொடர்பாக அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
அப்போது யுவனேஷ் பரபரப்பு தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்தார்.நான் 2 வயது குழந்தையாக இருந்தபோது, எனது தந்தை செந்தில்குமார் அமைந்தகரையில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
எனது தந்தை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் ராஜ்குமாரும் ஒருவர். அவர் 2021-ம் ஆண்டு வழக்கில் இருந்து விடுதலையானார்.
ராஜ்குமார் என்னை பார்க்கும் போதெல்லாம் உன் தந்தையை நான்தான் கொன்றேன் என்று எனது மனதில் பழிவாங்கும் உணர்ச்சியை தூண்டி வந்தார். அடிக்கடி என்னை சீண்டியதால் நானும், எனது நண்பர்களும் ராஜ்குமாரை போட்டுத்தள்ளினோம் .எனது நண்பர்களும், என்னுடன் இணைந்து இதனை செய்தார்கள்” என்று யுவனேஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து யுவனேசும், அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை தேடி வந்தநிலையில் மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The college student who stirred feelings of nostalgia and kicked out the ruffian