குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட கல்லூரி பேருந்து பறிமுதல்..பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு குமரி SP எச்சரிக்கை!
The college bus seized for drunken driving Kanyakumari SP warns school and college administrations
பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்களை அழைத்து செல்லும் பேருந்து ஓட்டுநர்களை தினமும் கண்காணிக்குமாறு பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின் I.P.S., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின் I.P.S., அவர்களின் உத்தரவுப்படி, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.லலித்குமார் I.P.S., அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர் சார்பில், பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரப்படுகிறது.
அதன்படி இன்று 30.06.25 ம் தேதி கோணம் பொறியியல் கல்லூரி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த கல்லூரி பேருந்தை சோதனை செய்த போது, ஓட்டுநர் மது போதையில் இருந்தது மூச்சு பரிசோதனை கருவி (Breath Analyser) மூலம் கண்டறியப்பட்டு குடிபோதை வழக்கு பதிவு செய்து கல்லூரி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதில் வந்த கல்லூரி மாணவிகளை மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர்,குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்களை அழைத்து செல்லும் பேருந்து ஓட்டுநர்களை தினமும் கண்காணிக்குமாறு பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின் I.P.S., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
The college bus seized for drunken driving Kanyakumari SP warns school and college administrations