தொழிலாளர் விரோத சட்டங்களை நிறைவேற்றி வருகிறது மத்திய பாஜக அரசு: ஐ என் டியு சி தலைவர் குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசு தொழிலாளர் விரோத சட்டங்களை வேகமாக அமலாக்கி வருகிறது என்று தமிழக ஐ என் டி சி மாநில தலைவர் ஜெகநாதன் குற்றம் சாட்டினார். 

ஈரோட்டில் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது :44 வகையான தொழிலாளர் நல சட்டங்கள் நான்கு தொகுப்புகளாக பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் தொழிலாளர் விரோத சட்டங்கள் வேகமாக அமலாக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு முன்பு 100 தொழிலாளர்கள் உள்ள ஒரு தொழிற்சாலையை மூட வேண்டும் என்றால் அரசு அனுமதி பெற வேண்டும். தற்போது 300 தொழிலாளர்கள் இருக்கும் தொழிற்சாலையை கூட அரசு அனுமதி இன்றி மூடலாம். 

அதேபோன்று ஏழு தொழிலாளர்கள் இருந்தால் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கலாம். ஆனால் தற்போது இருக்கும் தொழிலாளர்களில் 10 சதவீத தொழிலாளர் ஆதரவு இருந்தால் மட்டுமே தொழிற்சங்கம் உருவாக்க முடியும். விமான நிலையங்கள் துறைமுகங்கள் உட்பட பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் வேகமாக விற்கப்படுகின்றன. தனியார் மயம் ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எங்கு பார்த்தாலும் ஒப்பந்த தொழிலாளர் முறை உருவாக்கப்படுகிறது. 12 மணி நேர வேலை திணிக்கப்படுகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். ஆனால் அவர் பொருளாதார நிபுணர். எனவே எந்த விதத்திலும் தொழிலாளர்கள் உரிமை பறிக்கப்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்தார்.

 ஆனால் தற்பொழுது பாஜக அரசு அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் மிக வேகமாக தொழிலாளர் விரோத சட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. சமீபத்தில் கூட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் மிகப்பெரிய போராட்டத்தை நாடு தழுவிய அளவில் நடத்தின. பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகின்றன. உலக அளவில் தொழிற்சங்கங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மலந்தால் தான் தொழிற்சங்க உரிமைகள் தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The central BJP government is enforcing anti-labor laws Allegation by the AINDUC president


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->