மாடியில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி மரணம்.. இறப்பில் சந்தேகம் இருப்பதாக சகோதரன் புகார்..! - Seithipunal
Seithipunal


மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், சித்தூர் பகுதியில் வசித்து வருபவர் கண்பதிராஜா. இவர் அதே பகுதியை சேர்ந்த நாகலெட்சுமி என்ற பெண்ணை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த திங்கள் கிழமை அவர் துணி  காயவைப்பதற்காக மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால்தவறி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து தங்கையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாகலெட்சுமியின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The brother complained that the death of the pregnant woman was suspected


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->