இந்திய பொறியியல் அறிஞர் திரு.வா.செ.குழந்தைசாமி அவர்கள் பிறந்ததினம்!.
The birthday of the founder of Tamil Virtual University Mr V S Kulanthai Samy
தமிழ் இணைய பல்கலைகழகத்தின் நிறுவனத்தலைவர்திரு.வா.செ.குழந்தைசாமி அவர்கள் பிறந்ததினம்!.
இந்திய பொறியியல் அறிஞர் வா.செ.குழந்தைசாமி 1929ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி கரூர் மாவட்டம் வாங்கலாம்பாளையத்தில் பிறந்தார்.
நீர்வளத்துறையில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் எனப்படுகிறது. யுனெஸ்கோ நீர்வளத்துறைத் திட்டக்குழு உறுப்பினர் உட்பட உலக அளவில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், நீர்வளத்துறை பேராசிரியர் போன்ற பொறுப்புகளிலும், சென்னை அண்ணா, மதுரை காமராஜர், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் இருந்தவர்.
நீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர்.
தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, தமிழ் இலக்கிய பங்களிப்புக்காக சாகித்ய அகாடமி விருது, கல்வி, அறிவியல் துறை பங்களிப்புக்காக பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருது பெற்றவர்.
பன்முக ஆளுமை திறன் கொண்ட வா.செ.குழந்தைசாமி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அன்று மறைந்தார்.

மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் நினைவு தினம்!.
பழம்பெரும் இசையமைப்பாளரான திரை இசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் 1928ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி, கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தார். இவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்.
1953ல் வெளிவந்த ஜெனோவா படத்திற்கு முதன்முதலாக இசையமைத்தார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசையமைத்துள்ளார்.
கலைமாமணி, இசைப்பேரறிஞர் விருது, ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார்.
லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை தொட்ட மெல்லிசை மன்னர் தனது 87வது வயதில் 2015ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி மறைந்தார்.
English Summary
The birthday of the founder of Tamil Virtual University Mr V S Kulanthai Samy