கேள்விக்குறியாகும் பாமர ஏழை மக்களின் ஆதார் பாதுகாப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் விழிப்புணர்வு இன்றி இலவச ஆதார் சேவைக்கு பணம் கொடுத்து ஏமாறும் சூழல். பாமர ஏழை எளிய மக்களை ஏமாற்றி மோசடியாக பொய்யான தகவல்களை கூறி பணம் பறிக்கும் பிரவுசிங் சென்டர்கள் சில (தனியார் இசேவை மையங்களை) கண்டறிந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க  கோரிக்கை.

 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதிப்புக்குரிய மருத்துவர். நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் ஐ ஏ எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள மனு விவரம்...

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பகுதிகளில் பொது நலன் கருதி எவ்வித அனுமதியின்றி ஆதார் அப்டேப் என்ற பெயரில் ஏழை எளிய நடுத்தர பாமர மக்களிடம் பணம் பறிக்கும் பிரவுசிங் சென்டர்கள் சில (தனியார் இசேவை மையங்களை) கண்டறிந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் இது குறித்து எங்களுடைய சங்கம் சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டடத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்வுகாண நகல்களை இணைக்கப்பட்டுள்ளதை பரிசீலித்து ஆதார் ஆப்டேப் குறித்து பொது மக்களிடம் தொடர்ச்சியாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் இதேபோல் மாவட்ட பகுதிகளிலுள்ள பெரும்பாலான இடங்களில் எவ்வித அனுமதிகள் இன்றி  பிரவுசிங் சென்டர்கள் என்ற பெயரில் தனியார் இ சேவை மையத்தை போல் விளம்பரத்தி அப்பாவி பாமர ஏழை எளிய நடுத்தர மக்களை ஏமாற்றி ஆதாரில் செல்போன் எண் இணைத்தல், பெயர் திருத்தம், போட்டோ மாற்றம் போன்ற சேவைகளை அரசாங்க அலுவலகத்திலுள்ள மையத்தில் மட்டுமே செய்யப்படுகின்ற ஆதார் அப்டேப் பணிகளை சட்டவிரோதமாக ரூ.300, 500, 1000, தங்களுடைய இஷ்டமபோல் பணத்தை வசூலிக்கப்பட்டு கொள்ளை அடிப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

 திருப்பூரில் எவ்வித அனுமதிகள் இன்றி பிரவுசிங் சென்டர்கள் என்ற பெயரில் இ சேவை மையங்கள் என போலியாக செயல்படுகின்றவற்றில் போதிய விழிப்புணர்வுகள் இல்லாததால் தற்போது பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ. மாணவிகளை சேர்ப்பதற்காக ஆதார் .ஜாதி சான்றிதழ். முதல் அனைத்து அரசு ஆவணங்களை பெறுவதற்காக தனியார் மையங்களுக்கு செல்கின்றனர். அங்கு தாறுமாறாக பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது வாங்கும் பணத்திற்கு ரசீதும் வழங்கப்படுவதில்லை. அதிகாரிகள் ஆதரவுடன் இ சேவை மையம் நடத்துபவர்கள் பொது மக்களிடம் பகல் கொள்ளை அடித்து வருகின்றனர். எந்த அதிகாரியிடம் கூறினாலும் நடவடிக்கை எடுப்பது இல்லை.

 எனவே அலங்கரிக்கப்பட்டுள்ள இ சேவை மையங்களில் எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது மையத்தில் அரசு அனுமதி எண்கள் உள்ளிட்ட  அறிவிப்பு பலகைகளை அனைவருக்கும் தெரியும் வகையில் வைக்க வேண்டும். பொதுமக்களிடம் முறையாக வசூல் செய்யும் பணத்திற்கு உரிய ரசீது வழங்க வேண்டுமென  திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The basic protection of the common poor people is in question


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு


செய்திகள்



Seithipunal
--> -->