நள்ளிரவில் நடந்த கொடூரம்..துடி துடித்து இறந்த மூன்று உயிர்கள்.. விருத்தாசலம் அருகே சோகம்!
The atrocity that happened in the middle of the night three lives lost tragically mourning near Virudhachalam
டீ குடிப்பதற்காக சென்ற போது கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, சலையின் இடதுபுறம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியதில் மூன்று வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் புதிய காலனியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த தெருக்கூத்தை காண அப்பகுதியை சேர்ந்த மக்கள் திரளாக கூடி பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு ஒரு மணியளவில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன், . இவரது தம்பி கவுதமன் (20), இவரது நண்பர்களான ஆதினேஷ், அய்யப்பன் , வேல்முருகன், நடராஜன் , ஆகிய 6 பேரும் டீ குடிப்பதற்காக காரில் புறப்பட்டு விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே புறவழிச்சாலைக்கு சென்றனர்.
அப்போது கொளஞ்சியப்பர் கோவில் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையின் இடதுபுறம் உள்ள மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆதினேஷ், அய்யப்பன், வேல்முருகன் ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தனர். இதில் கார் அப்பளம்போல் நொறுங்கி உருக்குலைந்தது.படுகாயமடைந்த வெங்கடேசன், கவுதமன், நடராஜன் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
The atrocity that happened in the middle of the night three lives lost tragically mourning near Virudhachalam