ஆடிப்பூர தேரோட்டம்... எதிர்கட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்!
The Aadippur election campaign was inaugurated by the opposition leader
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தை எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டிற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதியுலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை 8.15 மணிக்கு நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு தேரோட்டத்தை வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.
இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 28-ந் தேதி சாமிக்கு தீர்த்தவாரி மற்றும் அம்மனுக்கு வளையல் அணியும் நிகழ்ச்சியும், 29-ந் தேதி இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது.
English Summary
The Aadippur election campaign was inaugurated by the opposition leader