முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கைவினைக் கலைஞர்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் பயனடைந்த கைவினைத் தொழிலாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 19.4.2025 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டு,தமிழகம் முழுவதும் உள்ள 8,951 கைவினைத் தொழில் முனைவோர்களுக்கு ரூ.170 மதிப்பீட்டிலான கடன் ஒப்பளிப்புகள் மற்றும் ரூ.34.00 கோடி மதிப்பீட்டிலான மானியத்திற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மேற்கண்ட திட்டத்தின் கீழ் மொத்தம் 259 பயனாளிகளுக்கு ரூ.365.45 இலட்சம் திட்ட மதிப்பீட்டில், ரூ.53.60 இலட்சம் மதிப்பீட்டிலான கடன் ஒப்பளிப்பபு மற்றும் மானியத்திற்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது.

கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் பயனடைந்த சிவகங்கை மாவட்டம சிங்கம்புணரி வட்டாரத்தை சேர்ந்த கைவினை தொழிலாளி திரு.சத்தியமூர்த்தி அவர்கள் தெரிவிக்கையில்,எனது பெயர் சத்தியமூர்த்தி. நான் சிங்கம்புணரி பகுதியில் வசித்து வருகிறேன். நான் தென்னை நார் கயிறு திரிக்கும் தொழில் மேற்கொண்டு வருகிறேன். இத்தொழிலின் மூலம் கிடைக்கப்பெறும் வருவாயினை கொண்டு, எனது குடும்பத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறேன்.

இந்நிலையில், எங்களது பகுதியில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு முகாம் நடத்தப்பட்டது. அம்முகாமில், நான் கலந்து கொண்டேன். அதில், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி திட்டங்கள் ஆகியன குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்துரைத்தனர்.
அச்சமயம், தமிழக அரசின் கலைஞர் கைவினைத் திட்டம் குறித்து நான் முழுமையாக அறிந்து கொண்டேன். அத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு மாவட்ட தொழில் மையத்தின் துறை சார்ந்த அலுவலர்களை அணுகினேன். அவர்களின் உரிய வழிகாட்டுதலின்படி, எனது தென்னை நார் கயிறு திரிக்கும் தொழிலினை விரிவுபடுத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து, கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன்.
 
எனது விருப்ப வங்கியின் கிளைக்கு எனது விண்ணப்பம் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில், எனது நிறுவன திட்ட மதிப்பீட்டுக்கான கடன் உதவி தொகை ரூ.3,00,000/- (ரூபாய் மூன்று இலட்சம்) உடனடியாக வங்கியின் சார்பில் வழங்கப்பட்டது.

மேலும், தமிழக அரசின் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த பயனாளியான எனக்கு 25 சதவீதம் முன்முனை மானியமான ரூ.50,000/-மும் (ரூபாய் ஐம்பாதாயிரம்) எனது வங்கி கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில், எனது கடன் தொகை கழிவு செய்யப்பட்டு, மீதமுள்ள கடன் தொகைக்கு நான் செலுத்த வேண்டிய வட்டித் தொகையில் 5 சதவீதம் வட்டியினை, முன்முனை மானியமாக பெற்று, எனது நிறுவனத்தில் 2 பணியாளர்களுடன் மிக சிறப்பாக எனது தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இதன் வாயிலாக எனது பொருளாதாரமும் தற்போது உயர்ந்துள்ளது.

என்னை போன்ற கைவினை தொழிலாளர்களது தொழில் நிறுவனத்தை சிறப்பாக அமைத்து, தொழில் புரிவதற்கென அடிப்படையான திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என கைவினைத் தொழிலாளி திரு.சத்தியமூர்த்தி அவர்கள் மனம் நெகிழ தெரிவித்தார்.

கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் பயனடைந்த சாக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்த கைவினை தொழிலாளி திரு.ராம்குமார்  தெரிவிக்கையில்,எனது பெயர் ராம்குமார். நான் சாக்கோட்டை பகுதியில் வசித்து வருகிறேன். நான் தையல் தொழில் செய்து வருகிறேன்.எனது தொழிலை விரிவு படுத்துவதற்கு போதுமான அளவில் என்னிடம் பொருளாதார வசதி இல்லை. ஆகவே, எனது தொழிலினை சிறிய அளவில் மேற்கொண்டு வந்தேன். அச்சமயம், மாவட்ட தொழில் மையம் மூலம் நடத்தப்பட்ட வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு முகாம் பற்றி அறிந்து கொண்டு, அம்முகாமில் பங்கேற்று அரசின் திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து, அறிந்து கொண்டேன். அத்திட்டங்களின் மூலம், எனது தொழிலை விரிவுபடுத்துவதற்கென துறை சார்ந்த அலுவலர்களை முறையாக அணுகி, உரிய வழிகாட்டுதல்களை பெற்று, கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன்.
 
எனது விருப்ப வங்கியான பேங்க் ஆப் இந்தியா வங்கி, காரைக்குடி கிளையின் மூலம் நிதியுதவி அனுப்ப கோரியதன் அடிப்படையில், எனது விண்ணப்பம் பரிந்துரைக்கப்பட்டு உடனடியாக வங்கியின் சார்பில் எனது நிறுவன திட்ட மதிப்பீட்டுக்கான கடன் உதவி தொகை ரூ.3,00,000/-மும் (ரூபாய் மூன்று இலட்சம்) வழங்கப்பட்டது.

தமிழக அரசின் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் பயனாளியான எனக்கு 25 சதவீதம் முன்முனை மானியமான ரூ.50,000/- (ரூபாய் ஐம்பாதாயிரம்) எனது வங்கி கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, எனது கடன் தொகையில் கழிவு செய்து, மீதமுள்ள கடன் தொகைக்கு நான் செலுத்த வேண்டிய வட்டித் தொகையில் 5 சதவீதம் வட்டியினை, முன்முனை மானியமாக பெற்று, தற்போது 4 பணியாளர்களுடன் எனது தொழில் நிறுவனத்தை விரிவுபடுத்தி, மிக சிறப்பாக நடத்தி வருகிறேன்.

இவ்வாறாக, சிறு கைவினைத்தொழிலை மேம்படுத்திடும் பொருட்டு, கலைஞர் கைவினைத் திட்டம் எனும் மகத்தான திட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்தி, சிறு கைவினைத்தொழிலாளர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய வழிவகை ஏற்படுத்திய  தமிழ்நாடு முதலமைச்சர்  கைவினை தொழிலாளர்களின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என கைவினைத் தொழிலாளி திரு.ராம்குமார்  மனநிறைவுடன் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thank you to the handcraft artists for the Chief Minister


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->