திவ்யாயின் கேஸ் தொடர்பாக, மாய முட்டுச்சந்து உலகு வாழ் சுகந்தி, சந்திரன் கைது.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருங்குளம் மேலத்தெரு பகுதியை சார்ந்தவர் சோமசுந்தரம். இவரது மனைவி இளஞ்சியம். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் திவ்யா. இவரை கள்ளச்சி திவ்யா அல்லது கார்த்திகை தேடிய திவ்யா என்று கூறினால் பலருக்கும் தெரியும். 

டிக் டாக் செயலியில் கள்ளச்சி திவ்யா என்ற பெயருடன் வலம்வந்த திவ்யா, கார்த்திக் என்ற வாலிபரை டிக் டாக் வாயிலாக காதலித்து அவரை தேடி அலைந்தது பலருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள சிக்கந்தர் சாவடி பகுதியை சார்ந்த சந்திரன் மற்றும் தேனி மாவட்டம் நாகனாபுரம் பகுதியை சார்ந்த சுகந்தி ஆகியோருடன் திவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த கொத்தடிமைகளும் டிக் டாக் செயலியின் மாய உலகில் பிரபலமானவர்கள். டிக் டாக் செயலி மத்திய அரசால் தடை செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகினாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்பு இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இவர்கள் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்னர், அதற்கு மாற்றாக களமிறக்கப்பட்ட செயலி மற்றும் முகநூலில் வீடியோ பதிவு செய்து வந்தனர். 

இந்நிலையில், இவர்களுக்குள் வீடியோ பதிவு செய்தது தொடர்பாக தகராறு ஏற்பட்ட நிலையில், திவ்யாவின் வீட்டிற்கு சென்ற சந்திரன் மற்றும் சுகந்தி, திவ்யாவின் தாயை தாக்கி, அவதூறான வார்த்தைகளால் பேசி தீட்டியுள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக வல்லம் காவல் நிலையத்தில் திவ்யாவின் தாய் இளஞ்சியம் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் 24 வயது சந்திரன் மற்றும் 28 வயது சுகந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Vallam Police Arrest TicTok Famous Theni Suganthi and Chandran As per Dhivya Kallachi Mother Complaint


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->