சிக்கலான வளைவு... பிரம்மாண்டமான மாளிகை... நம்மைப் பரவசப்படுத்தும் அரண்மனை..! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில் இருந்து ஏறத்தாழ 1கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து ஏறத்தாழ 58கி.மீ தொலைவிலும், அரியலூரில் இருந்து ஏறத்தாழ 45கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள பழங்கால அரண்மனைதான் தஞ்சாவூர் அரண்மனை.

பல நூறு ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் இந்த அரண்மனை, காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றுத் தலமாகக் காட்சியளிக்கிறது.

இந்த அரண்மனையில் மன்னர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், உடைகள், ஆபரணங்கள், சிறைக்கூடம், சுரங்கப்பாதை, மாடமாளிகை, பழங்கால ஓவியங்கள் என இன்னும் ஏராளம் உள்ளன.

இந்த அரண்மனை வளாகமானது ஏறத்தாழ 110 ஏக்கர் பரப்பளவுக்கு விரிந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இது தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.

தஞ்சையைத் தலைமையாகக் கொண்டு மன்னர்கள் ஆட்சி செலுத்திய மண்டபம் தர்பார் மண்டபமாகும். 

தஞ்சாவூர் மாநகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது இந்த தஞ்சை மாளிகை. இது தஞ்சை மராத்தா மாளிகை என்றும், தஞ்சாவூர் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது.

சோழர்கள் தஞ்சை மாநகரத்தில் இன்னும் பல அரண்மனைகள் கட்டியிருந்தாலும், இதுவே சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.

பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள் தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் கண்டு ரசிக்கக்கூடிய அழகிய அரண்மனையாக இது விளங்குகிறது. 

ஆயுத சேமிப்பு மாளிகை கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிகட்டுகள் மிகவும் சிக்கலான வளைவுகளைக் கொண்டவை.

அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகமும் சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. 

மன்னர் கால மருத்துவ முறைகள், கட்டிடக்கலை, சிற்பக்கலை உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய மிகவும் பழமையான நூல்கள் மட்டுமல்லாமல், ஏராளமான ஓலைச்சுவடிகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thanjavur maratha palace


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->