போலி டோக்கன் அடித்து கடையை மூடவைத்த சதிகாரர்கள்.. இப்படியா ஒரு மனுசனுக்கு சூழ்நிலை வரணும்..! - Seithipunal
Seithipunal


மளிகை கடை பெயரில் ரூ. 2,000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வாங்க போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்கள் ஏமாற்றப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இருந்தாலும் சில இடங்களில் பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் போன்றவை பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பவமும் அரங்கேறியது. 

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பெரிய கடைத்தெரு பட்டாச்சாரியார் பகுதியில் இருக்கும் பிரீமியம் மளிகை ஏஜென்சி என்ற கடையில், பொதுமக்கள் சிலர் அந்த கடையில் பெயருடன் 2000 ரூபாய் டோக்கன் கொண்டு வந்துள்ளனர். 

அரசியல் கட்சியினர் பணத்திற்கு பதிலாக உங்கள் கடையில் இலவசமாக மளிகை பொருட்களை வாங்குவதற்காக டோக்கன் கொடுத்து உள்ளனர் என்றும் அக்கடையின் உரிமையாளர் ஷேக் முகம்மதுவிடம் கூறவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர், நான் இலவசமாக பொருட்கள் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கவில்லை என்றும், தனக்கும் இந்த டோக்கனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். 

அப்போதுதான் மக்களுக்கு தங்கள் போலி டோக்கன் கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மக்கள் தொடர்ந்து அதிகளவில் கடைக்கு வந்ததால், ஷேக்முகமது எனக்கும் டோக்கனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது என்று சிறிய அளவிலான போஸ்டர் அடித்து அளவில் கடையின் வாயிலில் ஓட்டி கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். 

மேலும், இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில், அதிமுக கட்சியில் நான் கடந்த 25 வருடமாக இருந்து வருகிறேன். வாக்காளர்களுக்கு தனது கடையின் பெயரில் டோக்கன் அடித்து கொடுத்துள்ளது அதிர்ச்சியை தருகிறது. இது எதிர்க்கட்சிகள் சதி " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Kumbakkonam Premium Agency Shop Fake Token Issued Peoples


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal