தாயின் வருமானத்தில் படிக்கச் சென்று, காதல் பாடம் படித்த மகள்.. கம்பி நீட்டியவனால் காவல் நிலையத்தில் கண்ணீர்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் கோவில்பத்து கிராமத்தைச் சார்ந்தவர் சுகன்யா. சுகன்யாவின் தந்தை இறந்துவிட்டார். இவரது தாயார் கணவனை இழந்து தவித்த சூழலிலும் தனியொரு பெண்மணியாக கூலி வேலை செய்து சுகன்யாவை படிக்க அனுப்பி வைத்துள்ளார். 

சுகன்யா கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயின்று வந்துள்ள நிலையில், கல்லூரி பேருந்து பயணத்தின் போது அறிமுகமான நாடககாதலன் விஜய் என்ற நபர் மாணவி சுகன்யாவை காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான். இருவரும் காதலித்து வந்து நிலையில், கல்லூரி செல்வதை விட்டு விட்டு, கல்லூரி படிப்பையும் மறந்துவிட்டு கணவன் மனைவியாக இருந்து வாழ்ந்து வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. 

இருவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு இருக்காது என்று நம்பிய சுகன்யா, நாடக காதலன் விஜய் அவ்வப்போது அழைத்த இடத்திற்கெல்லாம் சென்று தங்கி வந்துள்ளார். விடுமுறை நாட்கள் என்றால் வாட்ஸப்பிலும் காதலில் மூழ்கி இருந்துள்ளார். 

கடந்த 2015 ஆம் வருடம் முதல் 2019 ஆம் வருடம் வரை கல்லூரி நாட்களில் படிப்பை மறந்த இருவரும் காதல் பாடம் படித்து வந்த நிலையில், திருச்சி மாநகராட்சியில் நாடக காதலன் விஜய்க்கு பணி கிடைத்ததும் அவர் சுகன்யாவை ஒதுக்கிவைத்து வந்துள்ளார். மேலும், எங்களது வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை என்றும்., தன்னை மறந்து விடும்படியும் கூறிய நிலையில், விஜய்க்கு கடந்த 4 ஆம் தேதி வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 

வரும் 13 ஆம் தேதி விஜய்க்கு பார்த்து வைத்துள்ள பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானதை அடுத்து, சுகன்யா மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் விஜய்யின் குடும்பத்தினரும் பேச்சை கேட்டு ரூ. 5 லட்சம் ரூபாய் பெற்று தருகிறோம், உனது பெண்ணை ஒதுங்கிவிட சொல்லுங்கள் என்று ஊர் நாட்டாமைகள் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் சுகன்யா தனக்கு தன் காதலன் தான் வேண்டும் என்று உறுதியாக இருப்பதால், காதலனை எப்படியாவது தனக்கு காவல் துறையினர் மீட்டு தருவார்கள் என்றும் ஏங்கி இருக்கிறார். பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலங்களில் ஒரே சமுதாய காதலோ, வேறு சமுதாய காதலோ., எந்தவிதமான காதலில் விழுந்தாலும் அது கேடு தரும் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சாட்சி. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanjavur Girl Cheating by His Love Boy Police Investigation 11 June 2021


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->